பக்கம்:மொழியைப் பற்றி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 53

சொற்களின் நடைமுறையில் விளைவிக்கும் விளைவுகளையும் எடுத்துக் காட்டியிருக்கிருர். * என்று இலெனின் உருகிய மொழியில் உள்ள சொற்களின் முழுமையான பொருளை மற்றவர்களுக்குத் தெரிவித்து இருப்பதைக் காண்கிருேம். அவர் எந்த அளவுக்கு உருசிய மொழி மீது பற்றுக்கொண்டு, அந்த மொழிவளர்ச்சிக்கு ஆக்கப் பணிபுரிந்திருக்கிருர்! ஒவ்வொரு சொல்லுக்கும் உண்மையான பொருள் என்ன என்பதை இலெனின் கண்டறிந்து, பல்வேறு மொழிகளில் உள்ள சொற்களின் பொருளையும் ஆய்வுசெய்து, எந்தச் சொல்லுக்கும் சரியான பொருளை மக்களுக்குப் புரியும்படி கூறி இருப்பது உண்மையில் அவருடைய அறிவாற்றலைக் காட்டு கின்றது. பெரிய புரட்சியில் ஈடுபட்டுத் தலைமை ஏற்ற இலெனின் இந்த அளவிற்கு மொழிவல்லுனராகவும், கருத்தாளராகவும் விளங்கி இருப்பதைக் கண்டு நாம் வியப்படையாதிருக்க இயலாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/55&oldid=713852" இலிருந்து மீள்விக்கப்பட்டது