பக்கம்:மொழியைப் பற்றி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

窃6 மொழியைப் பற்றி....

கேட்பவர்கள் மனத்தைக் கவரும் முறையில், உண்மைகளை மிகத் தெளிவாகக் கூறவேண்டிய முறையில் கூறவேண்டும். பேச்சைக் கேட்பவர்கள் மனநிறைவு கொள்ளும் வகையில் பேசவேண்டும். மிகப் பெரிய பொருண்மைகளை, அவர்கள் புரிந்துக் கொள்ளும் நடையில் பேசவேண்டும்.’’ என இலெனின் பேச்சாளர்களின் பொறுப்பை எடுத்துக்காட்டி இருக்கிறார். எதைப்பற்றிப் பேசுகிறோமோ, அதைப்பற்றி ஆராய்ந்து, அதனைக் கேட்பவர்கள் புரிந்துகொள்ளும் முறை யில் பேசவேண்டும் என்று மேடைப் பேச்சாளர்களுக்கு அறிவுரை கூறுகிறார். - மிகப் பெரிய சிறப்பான பொருண்மைகளைப் பொறுப்பற்ற முறையில், ஏனோதான்ோ என்று பேசுவது மேடைப் பேச்சாளர்களுக்கு அழகாகுமா? பேசும் பொருளைப்பற்றி பல்வேறு செய்திகளைத் தெரிந்து கொண்டால்தான்் அந்தக் கடமையைப் பேச்சாளர் நிறைவேற்ற முடியும் என்பதை உணர்வது நல்லது.

உலகம் என்பது நடுநிலக் (மெடரேனியன்) கடல் சார்ந்த பகுதியில் இருந்த நாடுகளைக் கொண்டதாக ஒமர் தெரிவித் திருக்கிறார். எகிப்தியர் நிலவின் நடமாட்டத்தையும், கோள் சுழற்சியையும் ஆராய முற்பட்டனர் என்றும் கூறுகிறார். ஒரு திங்களுக்கு 30 நாள்கள், ஓர் ஆண்டுக்கு 360 நாள்கள் என்றும் கூறுகிறார். எகிப்திய மக்கள் ஏற்கனவே ஆண்டுக்கு 365 நாள்கள் கொண்டிருந்தனர். அவர்கள் நிலத்தின் சுற்றளவு 40,000 கி. மீ. மாற்றலாக 45,000 கி. மீ. என்று கொண்டிருந்தனர் ! அரிஃடாகசு நிலவு நிலத்தைவிட 40 மடங்கு சிறியது என்ற கருத்தை மாற்றி 30 மடங்கு என்று கூறினார். நிலத்தைவிட ஞாயிறு 300 மடங்கு பெரியது என்றார்! இப்படிப்பட்ட தகவல்கள் கொண்ட நூல் உருசியாவில் காணப் படவில்லை. வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் இவை மெய்ப்பொருட்குப் பயன் படலாமே தவிர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/58&oldid=713855" இலிருந்து மீள்விக்கப்பட்டது