பக்கம்:மொழியைப் பற்றி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியைப் பற்றி.... நாடு முழுவதும் கல்வி அவரவர் மாநில மொழி களிலேயே கற்பிக்கப்படல் வேண்டும் (பக். 41); நல்ல அரசு எல்லா மொழியினருக்கும் மொழி பெயர்ப்பாளர் மூலமாக அரசாங்கத்தின் நட வடிக்கைகளை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பையும் வசதியையும் உண்டாக்கித் தரல் வேண்டும்' (பக் 44} என இலெனின் கூறியுள்ள இம் மொழிக் கருத்துகள் ஆட்சி மொழிச் சிக்க லில் அல்லற்படும் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் எந் நாட்டினர் ஆனாலும் பெறவேண்டிய தெளி வைப் பெற்று ஆட்சிமொழிக் கொள்கையை அமைத்துக் கொள்ளப் பெரிதும் பயன்படும் (பக் 42) என்பது திண்ண ம், உருசிய மொழி அகராதி எதிலுமில்லாத 4000 சொற்களை இலெனின் பயன்படுத்தி யுள்ளார் ; அவருடைய பேச்சுகளிலும் கருத்து களிலும் 12000 சொற்கள் ஒரே ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. அவர் மொத்தம் 37500 சொற்களைப் பயன்படுத்தி யுள்ளார் என்பன போன்று இலெனினின் மொழி ஆளுமை பற்றிய செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. மொழிச் சிக்கலுக்குத் தீர்வுகாண விழையும் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய அருமையான நூல் இது. திரு. கோவேந்தன் ஒரு சிறந்த மொழிச் சிந்தனையாளர் என்பதால் இலெனினின் சிந்தனையில் தோய்ந்து புரிந்து கொள்ளக் கடினமான பகுதிகளையும் எளிமை யாக்கி இனிய நடையில் எல்லோரும் துய்க்கும் வண்ணம் தந்துள்ளார். அவருடைய இவ்வரிய முயற்சிக்கு உளம் நிறைந்த பாராட்டு. அன்புடன், சு. செல்லப்பன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/6&oldid=1086660" இலிருந்து மீள்விக்கப்பட்டது