பக்கம்:மொழியைப் பற்றி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மொழியைப் பற்றி.

வாக எடுத்துக் கூற முடியும் என்பதை அறிவுறுத்தி யிருக்கிருர் இலெனின்.

  • முதலாளிகளின் நன்மைக்காகவே, முதலாளிகள் போர்களை உண்டாக்குகிறார்கள் என்கிற உண்மையை மார்க்சியவாணர் நன்கு உணர்ந்துள்ளனர். அதையே அவர்கள் கூறிக்கொண்டு இருக்கவேண்டியதில்லை. ஆனால் அதை எடுத்துச்சொல்வதில் ஈடுபட்டிருப்பவர்கள், கிளர்ச்சிகளில் நாட்டம் கொண்டவர்கள், இந்த உண்மையைப் பொதுமக்களுக்குப் புரியும்படியாக எடுத் துக் கூறவேண்டும். அதற்கும் வேற்றுமொழிச் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது ஏன் என்றால் கலந்து உரையாடுவதன் விளைவு வெறும் வெட்டிப் பேச்சாகப் பயன் அற்றுப் போகக் கூடாது. ’’

தொழிலாளர்களின் பகராளி (பிரதிநிதி) களாகவோ, உழவர் களின் பகராளிகளாகவோ, புரட்சியில் ஈடுபாடு கொள்கிற வர்கள் ஒரே குறிக்கோளுடன் செயல்படவேண்டும். வெற்றி என்பதே அவர்களின் குறிக்கோளாக இருக்கவேண்டும். ஒவ்: வொருவரும் மிகவும் பின்தங்கிய மக்களைக் கண்டு, உள்ள நிலைமையை முழுமையாகவும், தெளிவாகவும், விளங்கிக் கொள்ளக் கூடிய மொழியில் பேசவேண்டும் தொழிலாளியின் நிலையைப் பாடுபடும் பாட்டாளியின் நிலையை மையமாகக் கொண்டு மக்கள் தொடர்பு ஏற்படுத்த வேண்டும். மக்களின் தொல்லைகள் அகல வழிகாண வேண்டும். தயக்கம் காட்டு பவர்களுக்குத் தெளிவை உண்டாக்கி, எப்படிப் புரட்சியில் பங்குகொள்ள வேண்டும் என்கிற வழிமுறைகளைக் கூறி, அவர்களின் சோம்பலை, மெத்தனப் போக்கை நீக்க வேண்டும். ..~ அவர்களுக்கு எதிராக நடைபெறுகின்ற சூழ்ச்சிகளை விளக்கி, அவர்களை என்றும் ஏமாற்ற நினைப்பவர்களிடமிருந்து மீட்க வேண்டும். யார் யார் அவர்களுக்கு இரண்டகம் புரிய முற்பட்டு உள்ளனர் என்பதையும் உணர்த்த வேண்டும். ' புரட்சியின் பெறற்கரும் வெற்றிக்காக அவர் ஒவ்வொரு கட்டத் திலும் எவ்வளவு அக்கறை காட்டிச் சிந்தித்துச் செயல்பட்டிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/60&oldid=713857" இலிருந்து மீள்விக்கப்பட்டது