பக்கம்:மொழியைப் பற்றி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 59.5

கிறார் என்பதை நினைக்கும் போது, அவரது தலைமையின் சிறப்பைக் கண்டுகொள்ள முடிகிறது.

முதலாளிய அமைப்பில் செய்தித் தாள்கள் முதலாளிகளால் நடத்தப்படுகின்றன. அதனால் முதலாளிகளின் நலம் பாது காக்கப்பட்டு, அவர்கள் பயன் அடைகிறார்கள். பணம் குவித்துக் கொள்கிறார்கள். செய்தி நிறுவனங்கள் அவர் களுக்கு வேண்டிய தகவல்களைத் திரட்டித் தருகின்றன. முதலாளிகள் ஏற்கும் முறையில் அந்த ஏடுகள் நடத்தப் படுகின்றன. அதுமட்டுமில்லை இப்படிப்பட்ட செய்தித் தாள்கள் உழைக்கும் பாட்டாளி மக்களை ஏமாற்றவும், தொழி லாளர்களுக்கு எதிராகவும் நடத்தப்படுகின்றன. நாம் முதலாளிகள் இப்படி ஆதாயம் சம்பாதிப்பதை முறியடித்து விட்டோம். மேலும் தொழிலாளர்களை வஞ்சிக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம். மக்களுக்குக் கல்வி புகட்டும் சிறந்த கருவிகளாக அந்தச் செய்தித் தாள்களை மாற்றி விட்டோம். மக்கள் எப்படி வாழவேண்டும், அவர்களின் பொருளாதாரம் முதலாளிகளை நம்பியோ, நிலக்கிழார்களின் தயவிலோ இல்லாத அளவிற்கு மாற்றங்களைச் செய்யத் தொடங்கிவிட்டோம். ஆனால் அந்த வேலை இப்போதுதான்் தொடங்கப் பட்டிருக்கிறது. கடந்த காலத்தில் நாம் மிகுதி யாகச் செயலாற்றி விட்டதாகக் கூறுவதற்கு இல்லை. ஆற்ற வேண்டிவை ஏராளமாகக் குவிந்திருக்கின்றன. நமது பயணம் பெரியது. மிகவும் நெடியது. அரசியல் கவர்ச்சிகளை ஒர். அளவிற்கு குறைத்துக் கொண்டு, வாக்காடல்களையும் குறைத்துக்கொண்டு செயல்படவேண்டும். பொதுவுடைமை மெய்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாத பொது வுடைமையர் எழுப்பும் முழக்கங்களையும் குறைத்துக்கொண்டு, விளைப்பினைப் பெருகவேண்டும் என்கிற ஒரே குறிக்கோளைப் பற்றி நாம் இப்போது கருத்துப் பரப்பலைத் தீவிரப்படுத்த வேண்டும். அனைத்திற்கும் மேலாக நாம் பெற்றுள்ள நுகரறிவு: முழுவதையும் திறமையுடன் பயன் படுத்தி மக்களின் முன்னேற். றத்திற்குப் பாடுபட வேண்டும்.’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/61&oldid=713858" இலிருந்து மீள்விக்கப்பட்டது