பக்கம்:மொழியைப் பற்றி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 6蓝

பல மொழிகலைப்பயின்று பன்மொழி வாணராகத் திகழ்ந்தும் கூடத்தாம் பெற்ற அறிவை தம் மக்களுக்குத் தம்முடைய மொழி யிலேயே உள்ள வளமான சொற்களின் மூலம் வளமாகத் தெளிவு படுத்தவேண்டும் என்று உறுதியுடன் இருந்தார். பிறமொழிச் சொற்களைத் தவறுதலாகப் பயன்படுத்துவது கண்டு அவர் மிகவும் அல்லல்பட்டது உள்ளபடியே முறையாகும். அவருடைய தாய்மொழி பிற மொழிகளின் மூலம் எந்த அள விற்கு வளர்ச்சி பெறாமல் சிதைவுறுகிறது என்பதைப் பல இடங்களில் நன்கு எடுத்துக்காட்டி இருக்கிருர். * மார்க்சும் ஏங்கல்சும் உருசிய மொழியைப் பயின்றவர்கள். பல உருசிய நூல்களைப்படித்தவர்கள், உருசிய நாட்டின் வளர்ச் சியில் அக்கறை கொண்டவர்கள். உருசியப் புரட்சி இயக்கத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து உற்று நோக்கிப் புரட்சிய ரோடும் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தர்கள். தொடக் கத்தில் குடியரசு வாணர்களாக இருந்தவர்கள்; பிறகு சமன்மை வாணர்கள் ஆனவர்கள். அரசியல் கொடுங்கோன்மையை உணர்ந்து வெறுத்து மனமாற்றம் கொண்டவர்கள். அதனல் தான்் சரரின்ஆட்சியை எதிர்த்து உருசியப் புரட்சியாளர்கள் ஒரு சிலர் மட்டுமே தொடங்கியே வீறு மிக்க போராட்டம் அவர்கள் நெஞ்சங்களில் பரிவினை உண்டாக்கியது' என்று இலெனின் குறிப்பிடுகிருர். உருசியப் புரட்சியின் வெற்றிக்கு உருசிய மொழியும், உருகிய நூல்களும் எந்த அளவிற்கு வலிவோடு பயன் பட்டிருக்கின்றன என்பதை நாம் அறிகிறோம். புரட்சியாளர்களுக்குத் தாய்மொழி ஒரு பெரிய ஆற்றல் வாய்ந்த படைக்கலமாகும்.

எல்லா நாடுகட்கான பணியில் மிகவும் கடுமையாக உழைத்த தின் விளைவாக மார்க்சு உடல்தலம் குன்றிய நிலையும் கூட எழுத்துப் பணியில் அவர் மேலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அரசியல் பொருளாதாரத்தை எப்படி மாற்றி அமைப்பது என்ற அடிப்படை நோக்கில் பல்வேறு மொழிகளைப்படித்து அவற்றில் இருந்து ஏராளமான விளக்கங்களைத் தொகுத்தார். அவருக்கு உருசிய மொழியும் துணையாக இருந்தது. இருப்பினும் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/63&oldid=713860" இலிருந்து மீள்விக்கப்பட்டது