பக்கம்:மொழியைப் பற்றி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 மொழியைப் பற்றி....

பிரெஞ்சு, ஆங்கில நாடுகளிலேயே வாழ்ந்தாலும், நம் தாய் மொழி செருமன் மொழியிலேயே முதலீடு (காப்பிடல்) என்ற நூலை முழுமையாக எழுதிமுடிக்க இயலாமல் பெரும் பகுதியை எழுதினார்’’ மேற்கண்ட தகவலிலிருந்து மார்க்சின் உழைப்பைப் பற்றி தெரிந்து கொள்வதோடு பலமொழிகளைப் படித்து வேண்டிய தகவல்களைத் தேனிபோலத் தொகுத்து அயராத உழைப்பை ஆற்றலை நாம் காணலாம். மார்க்சு ஆழ்ந்த அக்கறையுடன் கற்ற மொழிகளில் உருசிய மொழியும் ஒன்று என்பதால் அம் மொழி எந்த அளவிற்குச் சிறப்பான மொழி என்பதனை அறி கிறோம்.

உலகின் முன்னேறிய நாடுகளில் வாழும் ஏழைத் தொழிலாளர் வகுப்புதான்் இறுதிவெற்றிபெறும் என்பது நமக்குத் தெரிகிறது. நாம் நம்முடைய பணியைத் தொடங்கி விட்டோம், இதே போன்று பிரிட்டனிலும், பிரான்சிலும், செருமனியிலும் தொழி லாளர் வகுப்பு ஒன்றுபட்டுப்பலம் பொருந்தியதாக அமையும். ஆனால் அவர்கள் வெற்றி பெற வேண்டுமேயானல் குடியேற்ற நாடுகளால் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் தொழிளாளர் வகுப்பின் உதவியுடன் தான்் வெற்றி பெறமுடியும். பொதுவுடைமை மாற்றம் ஏற்பட இது மிக இன்றியமையாதது. தொழிலாளர் புரட்சிப் பணிக்கு ஈடுபடுத்த வேண்டும். அவர்களே போராடக் கூடிய நிலையில் அமைப்புகளை உருவாக்க வேண்டும். பொது வுடைமைக் கொள்கைகளை அவரவர்கள் மொழிகளிலேயே மொழி பெயர்த்துப் பரப்ப வேண்டும். இது மிகத் தேவையான ஒன்று' என்று இலெனின் உலகத் தொழிலாளர் வகுப்புதான்் வெற்றி பெற்று நல்லாட்சியை அமைக்க வேண்டும் என்பதைத் தெளிவு படுத்துவதோடு, பொதுவுடைமைக் கொள்கைகளை அவரவர், அந்தந்த நாடுகளில், அவரவர் தாய் மொழியிலேயே தெரிந்து கொள்ளவேண்டும் என்று நல்ல வழிமுறையைக் காட்டியிருக்கிறார்.

பழைய முதலாலிய சமுதாயத்தை மாற்றி இந்தத் தலைமுறை ஆயினருக்குப் புதிய ஒரு சமுதாயத்தை உருவாக்குவதன் குறிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/64&oldid=713861" இலிருந்து மீள்விக்கப்பட்டது