பக்கம்:மொழியைப் பற்றி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 63

கோள் பழைய முறைகளை அப்படியே கையாள முடியாது. பயிற்றுவிப்பதும் பயிற்சியும் கல்வியும் இந்தக்கால இளைஞர் களுக்குப் புதியமுறையில் அளிக்கப் படவேண்டும். நாம் பட்டறி வின் மூலம் பெற்றுள்ள கூட்டறிவைக்கொண்டு அமைப்புகளை உருவாக்கி அவற்றின் மூலம் மாந்த ஆற்றலை ஊக்குவித்துச் செல்வதின் மூலமே வெற்றியைக் காணமுடியும். அப்போது தான்் பொதுவுடைமைச் சமுதாயத்தை நாம் உருவாக்க முடியும். ' - ★

  • நல்ல முறையில் போதிய வளர்ச்சி பெறாத நாட்டில் நாம் ஓட்டமும் பிடியுமாய்ச் சமன்மையை விரைவாகத் திணிப்பதாக நம் எதிரிகள் அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்கள். நம்முடைய நாட்டில் அரசியல் புரட்சியும் சமுதாயப் புரட்சியும் தோன்றிய பிறகுதான்் கல்வி, மொழி, கலை, இலக்கியம் ஆகியவற்றை உட்கொண்ட புது மலர்ச்சிக்கான பண்பாட்டுப் புரட்சி தோன்றி யிருக்கிறது. நமக்குப் பண்பாட்டுப புரட்சி மட்டுமே இன்று பெரும்பாடாய் இருக்கிறது. அதல்ைநாம் எதிர் அணியில் சிக்கல்களை நோக்கிச் செயல்படுகிறோம். இதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை' - என்று இலெனின் புரட்சிப் பாதையில் எதிர்நோக்கிய சிக்கலில் அக்கறையைக் காட்ட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/65&oldid=713862" இலிருந்து மீள்விக்கப்பட்டது