பக்கம்:மொழியைப் பற்றி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருசிய மொழி அகராதி

" தோழர் உலுனாசார்ஃகி’, அண்மையில் தால் அகராதியைப் பார்க்க நேரிட்டது. மிகவும் வேதனையும் தலைகுணிவும் ஏற்பட்டன. அது மிகப் பெரிய சாதனைதான்், ஆனால் அதில் வட்டாரச் சொற்களும், வழக்கிழந்த சொற்களும் பல கண்டேன். உருசிய மொழிக்குரிய உண்மையான நல்ல அகராதி ஒன்றினை உரு வாக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. நமது இலக்கியங்களில் உள்ள சொற்களும், இன்று வழக்கில் உள்ள சொற்களும், குறிப்பாகப் புரட்சிப்பாவலர் பூட்கின் காலத் தில் இருந்து கோர்க்கி காலம் வரை தொகுத்து ஓர் அகராதியை உருவாக்க வேண்டும். 30 பேர் புலமை பெற்றவர்களுக்குப் போதிய ஏந்துகள் செய்து கொடுத்து இந்தப் பணியில் ஈடு படுத்தவேண்டும்.

இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன? உருசிய இலக்கிய மொழி அகராதியின் தேவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்! எந்த வகையான வெளிப்படையான முயற்சியும் மேற்கொள்ளா மல்; உலகறிவு மிகுந்த, தகுதி வாய்ந்தவர்களுடன் இது குறித்துக் கலந்து ஆய்ந்து உங்கள் முடிவைத் தெரிவிக்க வேண்டு கிறேன். இதில் பெருந்தொல்லை இருக்காது'. என்று ஒரு மடல் இலெனின் எழுதியிருப்பது நோக்கத்தக்கது. அவர் தம் தாய்மொழிக்கு ஒரு தலைசிறந்த அகராதியை உண் டாக்க வேண்டும் என்பதில்கூட அக்கறை காட்டியிருப்பது வியப்புக்குரியது.

தோழர் போக்வெஃகி,

அண்மையில் தோழர் உலுனாசர்ஸ்கிக்கு ஒரு மடல் எழுதி யிருந்தேன். உருசிய மொழிக்கு ஒரு நல்ல அகராதி தேவை என்பது குறித்து அவரிடம் நேரில் பேசினேன். தால் '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/66&oldid=713863" இலிருந்து மீள்விக்கப்பட்டது