பக்கம்:மொழியைப் பற்றி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 65

அகராதி போன்றதன்று பூட்கின் காலத்திலிருந்து கோர்கி காலம்வரை நமது மொழியின் வளத்தை ஆய்வு செய்து பயன் படக்கூடிய ஓர் அகராதியை உருவாக்க வேண்டும். 30 அல்லது அதற்கும் மேலானவர்களையோ, இந்தப் பணியில் ஈடுபடுத்தி அவர்களுக்குத் தேவையான ஏந்துகளைச் செய்து கொடுத்து இந்தப் பணியைச் செய்திட வேண்டும். ஏற்கனவே இதைப்பற்றிச் சிந்தித்து வருவதாக உலுனாசர்ஃகி கூறினார். அதற்கு மேல் என்ன ஆயிற்று என்பது தெரிய வில்லை. அப் பணி மேற்கொள்ளப்பட்டு வேலைகள் நடைபெற்று வரு கின்றனவா, இல்லையா என்பதைக் கண்டறிந்து எனக்கு அருள் கூர்ந்து விடை எழுதவும் .

என்று இலெனின் மற்றும் ஒரு மடலை 1920 மே திங்கள் 4-ஆம் நாள் எழுதியிருக்கிறார். முதல் மடல் சனவரி திங்கள் 18-ஆம் நாள் தான்் எழுதியிருக்கிறார் ; மூன்று மாத காலம் இடைவெளி கொடுத்து மீண்டும் அகராதித் தொகுப்புக் குறித்து எழுதி யிருக்கிறார் என்பதை நினைக்கும் போது, இலெனின் எந்த அளவிற்கு அகராதியைப் படைப்பதில் பேரார்வம் காட்டியிருக் கிறார் என்பது புலப்படும்.

  • தோழர் இலட்கின்சு, நாம் சந்தித்துப் பேசிய நேரத்தில் நமது மொழி வல்லுனர்கள் பூட்சின் காலம் முதல் கோர்கி காலம் வரை நம் மொழியின் பன்முகமான சொற்களைத் த்ொகுத்து; புதிய அகராதி ஒன்று படைப்பது குறித்து வினவ மறந்துவிட்டேன்.

Qupir-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/67&oldid=713864" இலிருந்து மீள்விக்கப்பட்டது