பக்கம்:மொழியைப் பற்றி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மொழியைப் பற்றி....

தோழர்கள் பொக்ராவஃகி, உலுனாசார்ஃகியுடன் கலந்து பேசி அதற்கான ஏற்பாடுகள் செய்தேன்.

அந்த வேலை நடைபெறுகிறதா இல்லையா? சுருக்கமாக சரியாகக் கண்டறிந்து உடன் எனக்குத் தகவல் தரவும்' என்று மூன்றாவது மடல் ஒன்றும் மே மாதம் 6-ஆம் நாள் 1921-இல் இலெனின் எழுதியிருக்கிருர். இதிலிருந்து நல்ல நிறைவாக்கப் பணி சோர்வில்லாமல் சுருசுருப்பாகச் செய்யப்பட வேண்டும் என்பதில் இலெனின் காட்டியிருக்கும் ஆர்வம் நன்கு விளங்குகிறது.

உருசிய புரட்சிக்குத் தலைமை ஏற்று பல்வேறு பொறுப்புகளை அவர் கடமை உணர்வோடு செயலாற்றும் இக்கட்டான நிலையிலும் கூட இலெனின் தேசியமொழி, கலை, இலக்கிய, வளர்ச்சியில் நாட்டம் கொண்டு, அதனையும் விரிவாக விரைவாகச் செய்திட வேண்டும். என்று பலரைத் தூண்டி யிருப்பது, அவருக்கு மொழி வளர்ச்சியில் எவ்வளவு பற்றும், ஆர்வமும் இருந்திருக்கிறது என்பதையும் இதன் மூலம் அறிகிருேம்.

ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுவதன் மூலமே தம் வேலை முடிந்து விட்டது என்று மன நிறைவு கொள்ளாது, ஒப்படைத்த வேலை மேற்கொள்ளப்பட்டதா இல்லையா என்று கண்டறியவும், அதற்கான வழி முறைகளைக் கூறியும், அப் பணியில் ஈடுபடுவர்களுக்கான ஏந்துகளைச் செய்ய வேண்டும். என்றும் இலெனின் வற்புறுத்தி இருப்பது எதையுமே அவர் தீவிரமாக, எண்ணிச் செய்பவர் என்பது புலப்படுகிறது.

உருசிய மொழி வளர்ச்சிக்கும், வளத்திற்கும், ஏற்றத்திற்கும்

இலெனின் எந்த அளவிற்கு பாடுபட்டிருக்கிறார் என்பதைக் காண எவருக்குமே வியப்பு ஏற்படாமல் இருக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/68&oldid=713865" இலிருந்து மீள்விக்கப்பட்டது