பக்கம்:மொழியைப் பற்றி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 67

துர்கினேவ், தால்சுதோய், தோப்ரோல், யுபோவ், செர்னிஃ. வசுகி, ஆகியவர்களின் மொழி மிகவும் உயர்ந்தது. பேராற்றல் வாய்ந்தது. உருசியநாட்டில் குடியிருக்கும் ஒவ்வொரு குடி மகனும் உருசிய மொழியைக் கற்றிட வாய்ப்பும் வசதியும் உண் டாக்க வேண்டும் என்பது நம் விருப்பம். - வி. இ, இலெனின்

மேலும் பேச்சுவழக்கில் மட்டும் வாழ்ந்து, எழுத்துருவம் பெறாத பல தேசிய இன மொழிகட்கும் எழுத்துருவம் தந்து அம் மொழி களை இன்று உலகறியச் செய்த பெருமையும் இலெனினைச் சாரும்.

மற்றும் ஒரு தனிச்சிறப்பும் இலெனினுக்குண்டு. வரலாற்றை எட்டிக் காணும் கி. மு.விலிருந்து கி. பி. 20- ஆம் நூற்றாண்டு வரை எந்த ஓர் இலக்கியவாணரோ, அரசியல், பொருளியல், சமுகவியல், அறிவியல் அறிஞரோ கையாளாத வகையில் தம் எழுத்திலும் பேச்சிலும் 37500 சொற்ளைக் கையாண்டுள்ளார். இலெனினின் சொல்வினை ஆற்றல் வியப்புக்குரியதன்று, மருட் கைக்குடையது. மொழியையே விழியாகக் கொண்ட கழிபெரும் புலமையாளரும் இலெனினைப் போல் விழுமிய செழுமியராக இருப்பரோ, என்பது ஐயமே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/69&oldid=713866" இலிருந்து மீள்விக்கப்பட்டது