பக்கம்:மொழியைப் பற்றி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தின் தேவை

இலக்கிய வல்லுநர் - முனைவர் சகத்ரட்சகன், க. மு.

நாடாளுமன்ற உறுப்பினர்

தாய்நாட்டு மக்களின் உள்ளுணர்வை ஒழுங் குறக் காட்டுவதுதான்் தாய்மொழி. அது பல்லா யிரக்கணக்கான மக்களால் பன்னூற்றாண்டாகக் கையுழைப்பாலும் கருத்துழைப்பாலும் படைக்கப் பட்டது. தமிழே உலகின் முதன்மொழி, இந்திய மொழிகளின் தாய்மொழி; அது வீறியம் மிக்கது ; பன்முக வளங்கொண்டது. கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் ஆகிய முக் காலத்தையும் வாழ்வின் அனைத்துக் கூறுக ளோடும் இணைத்துப் பிணைத்துச் செழித்து வளரக்கூடியது. இலக்கியச் செழுமையும் வர லாற்றுச் சிறப்பும் மிக்கது.

முன்னேறி வரும் இன்றைய சமுதாயத்தில் தனி ஒரு மனிதனோ, நாடோ எண்ணங்களின் வளர்ச்சிக்கும் உணர்ச்சிகளின் பரிமாற்றத்திற்கும் தாய்மொழியைப்போல் ஓர் ஊற்றமான மொழி இருக்க முடியாது.

சமூக வரலாற்றோடும் - பண்பாட்டோடும் தான்் ஒரு மொழி வளரும், செழிக்கும். வள மார்ந்த மொழி என்பது, வளமார்ந்த எண்ணங் களால்தான்் மெய்ப்பிக்கப்படும். அந்தத் தாய் மொழி மக்கள் வள வாழ்வு வாழ்ந்தால்தான்் அது

முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/7&oldid=713804" இலிருந்து மீள்விக்கப்பட்டது