பக்கம்:மொழியைப் பற்றி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் சொல் அகராதி

இலெனின் பயன்படுத்திய சொற்கள் அடங்கிய அகராதியை வெளியிடச் சோவியத்து அறிவியல் பேரவையின், உருசிய மொழிக் கழகம் ஏற்பாடு செய்து வருகிறது. உருசிய மொழி அகராதி எதிலும் இல்லாத 4000 சொற்களை இலெனின் பயன் படுத்தினார் என்பது ஆராய்ச்சிகளிலிருந்து தெரிகிறது. அவ ருடைய பேச்சுகளிலும் எழுத்துகளிலும் 12,000 சொற்கள் ஒரே ஒரு முறைதான்் பயன்படுத்தப்பட்டுள்ளன. இலெனின் மொத்தம் 37,500 சொற்களைப் பயன்படுதியிருக்கிறார். (சர்வொண்டீசும் புஷ்கினும் தலா 20,000 சொற்களையும், பொலிவான் 16,000 சொற்களையும், ஷேக்ஸ்பியர் 15,000 சொற்களையும் தான்் பயன்படுத்தினர் என்பது இங்குக் குறிப் பிடத் தக்கது). இந்த அகராதி வெளியிடப்படுவது, புதிய மொழி இயலில் குறிப் பிடத்தக்க ஒரு நிகழ்ச்சியாகும் என்று, இந்த அகராதியைத் தொகுக்கும் குழுவின் தலைவரான பியோதர் தெணிசேர்வ் கூறி னார். இலெனின் பயன்படுத்திய சொற்கள் உருசிய மொழி மீது மிகுந்த செல்வாக்கு ஏற்படுத்தியதாகவும், ஆகவே அவற்றை ஆராயாமல் இப்பொழுது உருசிய மொழியைக் கற்பது இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார். காலப் போக்கில் எல்லா மொழிகளுமே மாறுதல் அடைகின்றன. உருசிய மொழியும் அதற்கு விதிவிலக்கில்லை. இலெனின் பயன் படுத்திய சில சொற்களின் பொருள் புதிய வாசகர்களுக்குத் தெளிவாகப் புரியாவல் இருக்கக்கூடும்; இப்பொழுது ஆக்கப் பட்டு வரும் அகராதி, அவற்றிற்குத் தெளிவான விளக்கம் கொடுக்கும். இலெனின் நூல்களை அயல் மொழிகளில் மொழி பெயர்க்க இது பெரிதும் உதவியாக இருக்கும். பல உருசியச் சொற்களையும் சொல்-தொடர்களையும் இலெனின் எந்தப் பொருளில் பயன்படுத்தினார் என்பதை இந்த அகராதி விளக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/70&oldid=713867" இலிருந்து மீள்விக்கப்பட்டது