பக்கம்:மொழியைப் பற்றி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருசிய மொழிபற்றி சோவியத்து அறிஞர்கள்

உருசிய மொழி பல ஆயிரக்கணக்கானப் ஆண்டுகளாக பேணிக் காக்கப்பட்டு, வளமான மொழியாகவும், அறிவின் ஊடக மாகவும், பாட்டுக்கும், சமுதாய வாழ்வின் ஏற்றத்திற்கு வழி காட்டியாகவும், மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளை யும், நம்பிக்கைகளையும், வேதனைகளையும், அவர்களின் எதிர்கால வேட்கையையும் எடுத்துக்காட்டும் மொழியாக வளர்க் கப்பட்டிருக்கிறது.

உருசிய மொழியின் தூண் போன்று விளங்கியவர், கவிஞர் அலெக்சாண்டர் பூட்கின். பூட்கினைப் போன்று உருசிய மொழிக்கு ஏற்றம் தந்தவர்களில் இலெர்மான்தோவ், இலேயோ தால்சுதாய், இலெகோவ், செகோவ், கோர்கி குறிப்பிடத் தக்கவர்களாவார்கள்.

- ஏ. என். தால்சுதோய்

உலகத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்திடப் பயன்படுத்தப் பட்ட உருசிய மொழி இயற்கையாகவே வளம் நிறைந்த, அழகான, ஆற்றல் படைத்த மொழியாகும். இந்த அளவிற்கு வேறு எந்த ஐரோப்பிய மொழியும் வளம் பெற்று இருக்க வில்லை. மற்ற மொழிகள் அடைந்திருக்கும் தனிச் சிறப்புகள் அனைத்தும் உருசிய மொழியின் மூலம் அடைய முடியும் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.

மற்ற மொழிகளுடன் ஒப்பிடும்போது உருசிய மொழி தனித் தன்மையுடன் சிறந்து விளங்குகிறது. உருசிய மொழிக்கு ஈடாக வேறு எந்த ஐரோப்பிய மொழியும் இல்லை. உருசிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/71&oldid=713868" இலிருந்து மீள்விக்கப்பட்டது