பக்கம்:மொழியைப் பற்றி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 71

என் தாய்நாடு தொல்லைகள் நிரம்பிய நிலையில் தவித்த போதும், வேதனைகளை நுகர்ந்த காலகட்டத்திலும், உருசிய மொழி ஒரு பெரிய, வல்லமை நிரம்பிய, உயர்ந்த, உண்மை யான மொழியாக இருந்து எனக்குத் தூண் போன்று உதவியது. அப்படிப்பட்ட மொழியைப் பெற்ற நாடு உயர்ந்த நாடாக விளங்காது என்று நினைக்கவே இடமில்லை.

- இவான் துர்கினிவ்

நமது மொழியின் உயர்வை நினைக்கும்போது திகைத்து விடுகிறோம். அதன் ஒலிப்பும் ஓசையும் நமக்கு கிடைத்த அன்பளிப்பாகும். அனைத்தும் முத்துக்குவியலாக விளங்கு கிறது. ஆம், உருசியமொழி குறிக்கும் பொருளைவிட அந்தச் சொல் மிகவும் விலைமதிக்க இயலாததாக விளங்குகிறது.

உருசிய மொழியில் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தப்பட்ட சொல் போன்று ஆழமான, மிகவும் விளக்கமான, ஓசை நயம் கொண்ட, பொருத்தமான சொல் வேறு எந்த மொழியிலும் இல்லை.

- நிகோலாய் கோகல்

திறமையுடன் எழுதவும், பேசவும் பழகிக் கொண்டவர்களுக்கு உருசிய மொழி, அழகிய, இனிமையான தெளிவான, எளிதான், இசைவான, விரைவுடன் கூடிய, செழுமையான மொழியாக அமைந்துள்ளது.

- அலெக்சாண்டர் குப்ரின்

உயர்ந்த மேடைப் பேச்சுக்கும், கேட்பவர் மகிழவும்,

நினைத்ததை அப்படியே பாட்டாகப் படைப்பதற்கும் நமது மொழி தகுதியானது. அது மட்டுமில்லை. நெஞ்சத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/73&oldid=713870" இலிருந்து மீள்விக்கப்பட்டது