பக்கம்:மொழியைப் பற்றி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மொழியைப் பற்றி ....

இடம் பெறத்தக்க சொற்களை மலிவாகக் கொண்டது. பிரெஞ்சு மொழியைவிட இனிமையானது. உள்ளத்தில் உதிக்கும் கருத்துகளை குரல் நயத்துடன் எடுத்துக்கூற ஏற்றது, சொல்வளம் கொண்டது, அடிப்படை மொழிகளுக்கு மட்டுமே இப்படிப்பட்ட தகுதிக் கூறுகள் காணப்படும். அந்த வகையிலும் உருசியமொழி சிறந்து விளங்குகிறது.

. நிகோலாய் கரம்சின்

இலக்கியப் படைப்புக்குத் தேவையான தகுதியை மற்ற எந்த ஐரோப்பிய மொழிகளைவிட உருசிய மொழி பெற்றிருக்கிறது.

அலெக்சாண்டர் பூட்கின்

இப்போது நாம் பெற்றிருக்கும் உருசிய மொழி 18-ஆம் தூற். றாண்டில் சிறந்த அறிவியல் மொழியாக வளர்க்கப்பட்டதாகும். எதையும் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கூற செழுமை பெற்றது. செர்மன் மொழியில் இயற்கையைப் பற்றிய அரிய சிந்தனைகளையும், பிரெஞ்சு மொழியில் காணப்படும் நகைச் சுவையும், நமது உருசிய மொழியில் வெளிப்படுத்த இயலும்.

நமது மொழியின் சிறப்புக்கு அடிப்படைக் காரணம் அது கடின மாக அல்லாதது. எதை வேண்டுமானாலும் எடுத்துக்கூற இயலும். நுணுக்கமான கருத்துகளை, உணர்ச்சி மிக்க பாடல் களை, வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களைக், கற்பனையில் தோன்றும் எண்ணங்களைப், பொங்கிவரும் இன்பங்களை, உள்ளத்தின் வேட்கையை எல்லோருக்கும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய சிறப்பு நமது மொழிக்கு இருக்கிறது.

- அலெக்சாண்டர் எர்சன்

மக்கள் பேச்சு மொழிக்கும் உருசிய இலக்கிய மொழிக்கும்.

மிகவும் நெருக்கமான பிளணப்பு உள்ளது. வேறு ஐரோப்பிய மொழிக்கு அப்படியில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/74&oldid=713871" இலிருந்து மீள்விக்கப்பட்டது