பக்கம்:மொழியைப் பற்றி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 73.

உருசிய மொழியில் ஏராளமான பெயர்ச் சொற்களும், வினைச் சொற்களும் குவிந்து காணப்படுகின்றன. அசைவுகளையும். நடமாட்டத்தையும், எண்ணங்களையும், சிந்தனைகளையும், வண்ணங்களையும், நுகர்வையும், பொருள்களையும் தெளிவாக விளக்கக் கூடிய தகுதி பெற்றிருப்பதால் உருசிய மொழி ஓர் அறிவியல்மொழி. நாகரிகத்தை வளர்க்கும் நமக்கு மிகப்பெரிய ஆற்றலாக விளங்குகிறது.

- ஏ. என். தால்சுதோய்

வாழ்க நம் மொழி! அது நம் நாட்டிலேயே அதிக வளமாக விளங்குகிறது. அயல்நாட்டு மொழி கலக்காதது. அது ஒர் ஆற்றைப் போல் பெருமையுடன் அழகாக ஓடுகிறது. அது பெருமிதமாக இடிமுழக்கம் செய்கிறது. தேவை ஏற்படும் போது எளிய ஓடையைப் போலக் காட்சித் தருகிறது. அது உள்ளத்தில் பாய்ந்திடவும், மாந்தர் குரல்தனை உயர்த் திடவும் செய்கிறது.

. நிகோலாய் கரம்சின்

நமக்குப் பேச்சுக்லை மிகவும் எளிமையாகவும், பொதுவான

தாகவும் தோன்றுகிறது, ஆனால் அந்த பேச்சின் கருத்து

மிகவும் உயர்ந்ததாகவும், வியக்கத்தக்கதாகவும் உள்ளது.

. ஏ. ஏன். இராதிசெவ்

நமது மொழிக்கு ஏராளமான சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒரு தனிச் சிறப்புப் பலருக்குப் புலப்படுவதில்லை. நமது மொழியில் உள்ள ஓசை நயம், உலக மொழிகளில் உள்ள அனைத்தையும் கொண்டதாக விளங்குகிறது.

மிகவும் வளமான தம் ஆற்றல் வாய்ந்ததும் - தெளிவு தரத் தக்கதும் - மகிழ்ச்சி யூட்டத் தக்கதும், சுவைக்கத்கக்கதுமான - ஒரு மொழியின் உடைமைக்காரர்களாக நாம் இருக்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/75&oldid=713872" இலிருந்து மீள்விக்கப்பட்டது