பக்கம்:மொழியைப் பற்றி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மொழியைப் பற்றி....

பிறமொழிச் சொற்களுக்கு ஈடான சரியான உருசிய மொழியில் சொற்கள் இருக்கும்போது, பிற மொழிச் சொற்களைப் பயன் படுத்துவது பொது அறிவையும், நல்ல பழக்கத்தையும் அவமதிப்பதாகும்.

உருசிய மொழியில் சொற்பொழிவாற்றும்போது தேவையில் லாமல் பிறமொழிச் சொற்களை அள்ளி வீசுவது பொது அறி வுக்கும், நல்ல பழக்கத்திற்கும் புறம்பான செயலாகும்.

. விசாரின் பெலின்சுகி

நம் ஒவ்வொருவருடைய கல்விக்கும், பொதுவாகக் கல்வியின்

நிலை உயரவும், நம்முடைய தாய்மொழியே அடிப்படையான இன்றியமையாததாய் அமையவேண்டும்.

. பி. ஏ. வியசெம்சுகி

நம்முடைய சிறந்த எழுந்தாளர்கள் நமக்குப் படைத்துள்ள எழுத்தோவி பங்களை நாம் போற்றிப் பாராட்டிப் பாதுகாக்க வேண்டும்.

- திமிட்ரி பர்மனோவ்

நாட்டுப் பற்று கொண்டவனுக்கு மொழிப்பற்றும் இருப்பது இன்றியமையாததாகும்.

- நிகலோவ் கரம்சன்

மொழியைப்பற்றி ஒருவன் கொண்டுள்ள கருத்தை அடிப்படை

யாகக் கொண்டு அவனுடைய பொதுவாழ்க்கையையும் பண் பாட்டு நிலையையும் சரியாக மதிப்பிடலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/78&oldid=713875" இலிருந்து மீள்விக்கப்பட்டது