பக்கம்:மொழியைப் பற்றி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின்

பெரியாரின் பெருஞ் சிந்தனையையும் அறிஞர் அண்ணாவின் அருங் கருத்தினையும் ஏற்ற சமுதாயம் ஓரளவு ஆட்சியில் வெற்றி கண்டது. சமூகப் பொருளியலில், வாழ்வியலில், மொழி வழியில் இன்னும் மேம்படவில்லை என் பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டி யுள்ளது.

ஓர் இனத்தின் நாகரிகத்தைப் பண்பாட்டை அழிக்க வேண்டுமானால் அவ் இனத்தின் மொழி வழக்கிலும் வாழ்விலும் எண்ணத்திலும் பிற மொழியின் தாக்கத்தை கலப்பை உண்டாக்கி விட்டால் போதும், அவ் இனத்தின் குடும்ப வாழ்வு முதல் அரசியல் வாழ்வுவரை அடியோடு சிதைத்து விடலாம் என்று ஓர் அறிஞன் கூறியுள்ளான்.

அந்த உண்மையைக் காலங் காலமாய்த் தமிழர் கண்டு வருகின்றனர். இடையிடையே தோன்றிய வாழ்வியல் மருத்துவர்கள் மொழிப் பிணிக்கு மருந்தீந்தாலும் - மொழி நலம்பெறச் செய்தாலும், தமிழ்ப்பகை ஈக்களும் கொசுக் களும் சமுதாயச் சாய்க்கடையிலும், மொழி மனை யிலும் முற்றும் அகலவில்லை. அரசியல் அறி யாமையின் வாய்ப்பிடங்களிலும், தாளிகைகளின் கழிப்பிடங்களிலும், பொருள் விலைப் புல்லர்களின் கல்வித்துறையின் குப்பைத் தொட்டிகளிலும் மொய்த்து நாளும் நாளும் சீர்கேட்டையும் செம் மாப்பையும் எண்ணச் செழுமையையும், அறிவிய லின் சீர்த்தியையும் அரசியலின் நேர்மைச் சிறப்பையும் வாழ்வியலையும் நோக்காடடையச் செய்கின்றன.

மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர், க. ப. மகிழ்னன், வளவன் பாண்டியனார், பாவேந்தர், அவ்வை துரைசாமிப் பிள்ளை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/9&oldid=1086661" இலிருந்து மீள்விக்கப்பட்டது