பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீட்டுப் பொருள்களும் விளையாட்டுக் கருவிகளும்

91


கிடைத்த மட்டாண்டங்களையும் சிதைந்த மண் ஒடுகளையும் விடாமற் பாதுகாத்து வருகின்றனர்; மொஹெஞ்சொ-தரோவில் உள்ள இல்லங்களிலும் கழிநீர்ப் பாதைகளிலும் சிதைந்தும் சிதையாமலும் கிடைத்த மட்பாண்டங்களைச் சேமித்து வைத்துள்ளனர்.

பலவகை மட்பாண்டங்கள்

மொஹெஞ்சொ-தரோவில் விளையாட்டுக் கருவிகள் முதல் வீட்டிற்குப் பயன்பட் மட்பாண்டப் பொருள்கள் வரை யாவும் பல திறப்பட்ட உருவங்களை உடையனவாக உள்ளன. சில நன்னிலையில் கிடைத்துள்ளன; சில அரைகுறையான நிலையில் கிடைத்துள்ளன; பல சிதைந்த நிலையில் இருக்கின்றன. இவற்றுக்கும் ஹரப்பாவில் கிடைத்துள்ள பல திறப்பட்ட மட்பாண்டங்கட்கும் சிறிதளவே வேறுபாடு உள்ளது. இவ்வேறுபாடு கொண்டு, ஹரப்பா நகரம் மொஹெஞ்சொ-தரோவை விடச் சிறிது முற்பட்டதாக இருக்கக்கூடுமோ என்று ஐயுறுவாரும் உளர். இவ்விரண்டு இடங்களிலும் நாடோறும் கையாளப்பட்ட மட்டாண்டங்களைப் போன்றவை எகிப்திலும் பாபிலோனியாவிலும் நாடோறும் வீடுகளில் பயன்பட்டனவாகவே காணப்படுகின்றன. எனவே, அக்காலத்து நாகரிக நாடுகளில் எல்லாம் இம்மட்டாண்டங்கள் பெரிதும் ஒன்று போலவே இருந்தன எனக் கூறல் ஒருவாறு பொருந்துவதாகும்.

களிமண் கலவை

சிந்து ஆற்றுக்களி மண்ணே மொஹெஞ்சொ-தரோ மக்கட்குப் பேருதவி புரிந்ததாகும். அம்மண்ணில் ஓரளவு அப்ரகமும் சுண்ணாம்பும் அணுக்கள் வடிவில் கலந்திருந்தன. மட்பாண்பு வினையாளர் அம்மண்ணை ஓரள்வு தெள்ளிய மணலுடன் கலந்து நன்றாக அரைத்து, மட்பாண்டங்களையும் விளையாட்டுக் கருவிகளையும் ஏராளமாகச் செய்தனர். இக்கலவையினால் பொருள்கள்