பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

மொஹெஞ்சொ - தரோ


உள்ளன; அஃதாவது, குமிழ்கள் வரிசை வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.இதன் அடிப்புறம் கூம்பி ஒரு தண்டு போல் அமைந்துள்ளது. இத்தகைய நூதன பாண்டங்கள் மிகச் சிலவே கிடைத்துள்ளன.இவை போன்ற்வை இராக்கின்மேல்பகுதிகளில் உள்ள டெல் அஸ்மர் என்னும் இடத்தில் கண்டெடுக்கப் பட்டன என்பது கவனித்தற்குரியது.

வெண்கற் பானைகள்

வெண் கல்லாற் செய்யப்பட்ட பாண்டங்கள் சிலவேனும் மொஹெஞ்சொ-தரோவில் இருந்தன என்பதை உறுதிப்படுத்தச் சில சிதைந்த ஒடுகள் கிடைத்துள்ளன.இவை நீலங் கலந்த சாம்பல் நிறத்துடன் காணப்படுகின்றன. உடைந்த ஒடுகள் நிரம்பக் கிடைக்காமையின், இப்பாத்திரங்கள் மொஹெஞ்சொ-தரோவில் அருகியே இருந்தன என்று நினைக்கலாம். ஆனால், இவை சுமேரியாவில் நிரம்பக் கிடைத்துள்ளன. பலுசிஸ்தான்-ஈரான் எல்லைப் பிரதேசத்தில் கறுப்பும் நீலமும் தீட்டப்பட்ட இத்தகைய வெண்கற் பாத்திர ஓடுகள் பலவற்றை டாக்டர் மக்கே கண்டு பிடித்தனர். எனவே, ‘இவை, சிந்துப் பிரதேசத்திற்கு மேற்கே பேரளவில் பயன்பட்டன; சிந்துப் பிரதேசத்தில் மிகக்குறைந்த அளவிலேயே பயன்பட்டன’, என்று அவர் கூறுகின்றார்.

கைப்பிடி கொண்ட கலன்கள்

மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த வாணல் சட்டி ஒன்று இருபுறமும் கைப்பிடி கொண்டதாக இருக்கின்றது. பெரிய தாழிகளின் கலயம் போன்ற மேல்மூடிகளின் மேற்புறத்தில் மட்டும் கைப்பிடிகள் உள்ளன. வேறு சில மட்கலன்களில் கைப்பிடிக்குப் பதிலாகக் கைவிரல் நுழையத் தக்கவாறு துளைகள் அமைந்துள்ளன. ஆயின், ஹரப்பாவில் ஒரு புறம் கைப்பிடி கொண்ட கலயமும் இருபுறம் கைப்பிடி கொண்ட கலயமும் கிடைத்தன. இரட்டைக் கைப்பிடி உள்ள