பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீட்டுப் பொருள்களும் விளையாட்டுக் கருவிகளும்

103


திருத்தல் வேண்டும் என்பது அறிஞர் கருத்து, களிமண் பொருள்கள் பலவும் பல திறங்கள் கொண்டவை.

இன்றும் ஊதும் ஊதுகுழல்

களிமண்ணைக் குடைவான உருண்டையாகச் செய்து அதன் உள்ளே சிறிது கற்களை இட்டுக் கலகல என்று ஒலிக்குமாறு செய்யப்பட்ட கிலுகிலுப்பைகள் பார்க்கத்தக்கவை ஆகும். மண் பந்துகள், வால்புறம் துளையுடைய கோழி, குருவி போன்ற ஊது குழல்கள் கண்ணைக் கவர்வனவாகும். ‘யான் ஓர் ஊதுகுழலை எடுத்து ஊதினேன். அது நன்றாக ஊதியது. 5000 ஆண்டுகட்குமுன் பயன்பட்ட ஊதுகுழல் இன்றும் அங்ஙனமே பயன்படல் வியத்தற்குரியது அன்றோ!’ என்று அறிஞர் சி.ஆர்.ராய் கூறியுள்ளது வியப்பூட்டும் செய்தியாகும். ஒரு பறவை வடிவம் அமைந்த ஊதுகுழல் பலவகை ஒசைகள் உண்டாகுமாறு திறம்படச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலை அசைக்கும் எருது

வேட்கோவர், களிமண்ணைக்கொண்டு விலங்குகளின் தலைவேறு-உடல்வேறாகச் செய்து, பிறகு இரண்டையும் இணைப்பதற்கு இயன்றவாறு துளைகள் இட்டுச் சூளை யிட்டனர். பின்னர் இரண்டையும் கயிறுகொண்டு பிணைத்து விட்டனர். இங்ஙனம் செய்யப்பட்ட விலங்குப் பதுமைகள் காற்றுப்படினும் கயிற்றை இழுப்பினும் தலையை அசைத்துக் கொண்டே இருக்கும். இவ்வாறு தலை அசைக்கும் விலங்குப் பதுமைகளுள் எருதுகளே பலவாகக் கிடைத்துள்ளன. கைகளை அசைக்கும் குரங்குப் பதுமைகளும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வண்டிகள்

மொஹெஞ்சொ-தரோவில் களிமண் (விளையாட்டு) வண்டிகள் சில் கிடைத்துள்ளன. இவை மிக்க வனப்புடையவை: நன்கு உருண்டு ஒடக்கூடியவாறு அமைந்துள்ளவை. இவை, கி.மு.3200 ஆண்டுகட்கு முற்பட்ட ‘உர்’ என்னும் நகரத்திற்