பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

மொஹெஞ்சொ - தரோ


என்னும் மூன்று இடங்களில் உண்டு. அவை சிந்துவிற்கு அண்மையில் இருத்தலால் அங்கிருந்தே செம்பு கொண்டுவரப்பட் டிருத்தல் வேண்டும் என்பது அறிஞர் கருத்து.

செம்பில் நிக்கல் கலவை

செம்பில் ஈயத்தோடு நிக்கலும் கலந்திருப்பதாக அறிஞர் சோதித்து அறிந்துள்ளனர். இவ்வாறே சுமேரியாவில் கிடைத்த செம்பிலும் நிக்கல் கலந்துள்ளது. இந்நிக்கல் கலப்புடைய செம்புக் கனிகள் அரேபியாவில் உள்ள ‘உம்மான்’[1] என்னும் இடத்திற்றான் இருக்கின்றன. எனவே, சுமேரியரும் சிந்துப் பிரதேச மக்களும் அவ்விடத்துச் செம்பையே பயன்படுத்தினர் என்று சிலர் கருது கின்றனர். ஆயின், இந்தியாவிலேயே சோட்டா நாகபுரியில் உள்ள செம்புக் கனிகளில் நிக்கல் கலவை இன்றும் காணப்படுவதால், இக்கனிகளிலிருந்தே சிந்துப் பிரதேச மக்கள் செம்பைக் கொண்டு சென்றனராதல் வேண்டும் என்று அறிஞர் மக்கே உறுதியாக நம்புகின்றனர்.[2] இதுவே பொருத்தமானதாகவும் தோற்றுகிறது.

செம்பு கலந்த மண்

செம்பு கலந்த மண் சிந்துப் பிரதேசத்திலேயே கிடைத்திருத்தல் கூடும் என்று எண்ணுதற்குரியவாறு மண்ணிலிருந்து செம்பை வேறாகப் பிரித்தமைக்குரிய அடையாளங்கள் காண்கின்றன. செங்கல் கொண்டு கட்டப்பட்ட தொட்டிகளில் செம்பு கலந்த மண் குவியல்களும் உருக்கப்பட்ட செம்புப் பாளங்களும் தட்டிகளும் கிடைத்த்ன ஆனால், இவை உருக்கப்பட்ட முறை உணருமாறு இல்லை. ஆதலின், பொதுவாக நிலத்திற் குழி செய்து அதில் நிலக் கரியும் செம்பும் மண்ணும் இட்டுத் தீப்பற்ற வைத்து, துருத்தி மூலம் சூட்டை மிகுத்துச் செம்பை உருகச் செய்யும் எளிய முறையையே அப்பண்டை மக்கள் கையாண்டனர்; இங்ஙனம் உருகிய செம்பைத்


  1. இச் சொல் ஆங்கிலத்தில் ‘oman’ எனப்படும்.
  2. Dr.Mackay’s, ‘The Indus Civilization’, p.122