பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

மொஹெஞ்சொ - தரோ


வெள்ளியம்

மொஹெஞ்சொ-தரோவில் செம்பொடு கலப்பதற்கே வெள்ளியம் மிகுதியாக வேண்டியிருந்ததால், வெள்ளியத்தாற் பொருள்கள் பலவும் செய்யக்கூடவில்லை. அதனால், அம்மக்கள் பம்பாய், பீஹார், ஒரிஸ்ஸா, முதலிய பிற மண்டிலங்களிலிருந்து வெள்ளீயத்தை வரவழைத்திருத்தல் வேண்டும்.

காரீயம்

சிந்துப் பிரதேச மக்கள் காரீயத்தை மிகுதியாய்ப் பயன்படுத்தினர் என்று கூறுதல் இயலாது. அங்கு இதுகாறும் கிடைத்த பொருள்களுள் தட்டு ஒன்றே காரீயத்தால் செய்யப்பட்டதாக உள்ளது. இந்த உலோகத்தால் செய்யப்பட்ட வேறு பொருள்கள் கிடைக்கவில்லை.

மக்களின் மதி நுட்பம்

ஒரே இடத்தில் எல்லாப் பொருள்களும் கிடைப்பது இயற்கை யன்று. ஒவ்வொரு பொருள் ஒவ்வோர் இடத்திற் கிடைப்பதே இயற்கை. ஆயினும், நாம் நமக்குத் தேவைப்படும் பல பொருள்களைப் பல்வேறு இடங்களிலிருந்து வரவழைத்துக்கொள்கிறோம் அல்லவா? நம்மைப் போன்றே அப்பண்டைக்கால மக்களும் தங்கள் மதி நுட்பத்தால் அவை அவை கிடைக்கக்கூடிய இடங்களிலிருந்து வரவழைத்து, அவற்றைக் கூர்த்த மதியுடன் பயன்படுத்தி வந்தனர் என்பது மேற்சொன்ன செய்திகளிலிருந்து அறியலாம்.அச்செய்திகள் உண்மையாயின், அம்மக்கள் தென் இந்தியாவில் கோலார் வரை இருந்த நாட்டை நன்கு அறிந்திருந்தனர்; தென்னாட்டவருடன் வாணிபம் செய்தனர் என்பன அறியலாம். மணிகளும் பிறவும் செய்யப் பயன்பட்ட ஒருவகைப் பச்சைக்கல் (அமெஜான் கல்) நீலகிரியில் உள்ள ‘தொட்ட பெட்டா’ என்னும் இடத்திலிருந்து மொஹெஞ்சொ-தரோவுக்குக் கொண்டு செல்லப்பட்டது என்று அறிஞர் கூறுதல் உண்மையாயின், அச்சிந்துப் பிரதேசமக்கள் நீலகிரியையும் நன்கு