பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

மொஹெஞ்சொ - தரோ


நக்கீரர் பிறந்த தமிழகத்திலும் சங்கறுக்க இத்தகைய இரம்பங்களையே பயன்படுத்தியிருத்தல் கூடியதே அன்றோ?

உளிகள்

இவை பல வகைப்பட்டவை: பெரியவை 12, 5 செ. மீ. உயரத்திற்கும் மேற்பட்டவை; சிறியவை 4.5 செ. மீ. உயரமுடையவை. இவை இருபுறமும் கூர்மை உடையவை. பல உருட்டு வடிவில் அமைந்தவை; ஒன்று மட்டும் பட்டை வடிவில் அமைந்தது. இப்பட்டை வடிவ உளி சுமேரியா முதலிய அயல் நாடுகளில் கிடைத்திலது. இவ்வுளிகள் கல்லையும் மரத்தையும் செதுக்கப் பயன்பட்டவையாகும்; முத்திரைகளைச் செதுக்கு வதற்கென்றே மிக நுண்ணிய முனையுடன் கூடிய சிற்றுளிகளும் கிடைத்துள்ளன.

தோல் சீவும் உளிகள்

தோலைக் கொண்டு தொழில் புரிந்தவர் பயன்படுத்திய உளி தனிப்பட்ட முறையில் அமைந்துள்ளது. அக்காலத்தவர் செருப்புகளை அணிந்து இருந்தனர் என்பதற்குரிய சான்றுகள் இதுகாறும் கிடைத்தில. ஆயினும், மிருதங்கம் போன்ற சில வாத்தியங்கள் இருந்தன என்பதற்குரிய சான்றுகள் கிடைத்துள்ளன. எனவே, தோல் வேலை அக்காலத்தில் இருந்தது என்பதை உணரலாம். அத்தோல்-தொழிலாளர் மேற்சொன்ன உளியைப் பயன் படுத்தினர் போலும்! அது கத்தி போன்ற தகடு கொண்டு உளி போல முனையில் மட்டும் கூர்மை உடையதாகச் செய்யப்பட்டுள்ளது. ஒர் உளி மரப்பிடியுடன் கிடைத்துள்ளது. அம்மரப்பிடி, இக்காலத்துக் கத்திப் பிடிகட்குப் பயன்படுத்தும் மரங்கொண்டே செய்யப்பட்டிருத்தல் மிக்க வியப்பூட்டுவதாகும்.

கோடரிகள்

கோடரிகள் நீண்டும் குறுகியும் அகன்றும் உள்ளன. இவை, அச்சுச் செய்து அதில் உலோகத்தை உருக்கி வார்த்துச் செய்யப்பட்டவை என்று அறிஞர் மதிக்கின்றனர்; வார்ப்படம்