பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கணிப் பொருள்கள்

113


வார்த்த பிறகு எடுத்துச் சம்மட்டி கொண்டு அடித்துச் சரிப்படுத்தி ஒழுங்கான கோடரியாகச் செய்யப்பட்டுள்ளன. ஒரு கோபரி 27.5 செ.மீ நீளமும்: பவுண்ட் 3 அவுன்ஸ் நிறையும் உடையதாகும். இக்கோடரிகள் நடுவில் மரக்காம்பை துழைக்கத் துளைகள் பெற்றுள்ளன.

வாய்ச்சி

மொஹெஞ்சொ-தரோவில் வெண்கலத்தால் செய்யப்பட்ட வாய்ச்சி ஒன்று கிடைத்தது. அது மிகுந்த வேலைப்பாடு கொண்டது. அதன் நடுவில் மரக்காம்பு நுழைய இடம் விடப்ப்ட்டுள்ளது. அதன் நீளம் 25 செ.மீ. ஆகும். அது, காகஸஸ் மலைப் பிரதேசத்தில் கூபன் ஆற்றுப் படுகையிற் கிடைத்த வாய்ச்சியை ஒத்துள்ளது வியப்புக்குரியது.இதன் காலம் இன்னது என்பதை இன்று உறுதியாகக் கூறல் இயலவில்லை.

மழித்தற் கத்திகள்

மொஹெஞ்சொ-தரோவில் நான்கு விதமான மழித்தற் கத்திகள் கிடைத்துள்ளன: (1) அரை வட்ட வடிவில் நீண்ட கைப்பிடி கொண்டவை. இவையே மிகுதியாகப் பயன்பட்டவை. (2) ‘ட’ போன்ற வடிவில் அமைந்துள்ளவை. (3) வளைந்திருக்கும் கத்தி. இதன் கைப்பிடி கத்தி வளைவுக்கு ஏற்றவாறு பின்புறம் வளைந்து விரித்துத் தலைபோலச் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்றவை, எகிப்தில் ‘பாரோ மன்னர்’ தம் 18ஆம் தலைமுறை ஆட்சியில் வழக்கில் இருந்தனவாம். (4) நான்காம் வகை மழித்தற் கத்தி நீண்டு நேராக முனையில் மட்டும் வளைவுடன் காணப்படுகிறது. இது மெல்லிய தகட்டில் மிக்க கூர்மையாகச் செய்யப்பட்டுள்ளது. இக்கத்தி பிறவற்றினும் அருகிக் கிடைத்திருத்தலால், மதிப்புடைய வகையாகக் கருதப்பட்டிருத்தல் கூடியதேயாம். இந்நான்கு வகை யன்றிச்