பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனிப் பொருள்கள்

115


5 செ.மீ நீளமுடையவை. அவை செம்பாலும் வெண்கலத் தாலும் செய்யப்பட்டவை. இவையன்றித் தந்தத்தால் இயன்ற தடிகள் சில கிடைத்தன. இவை 20 செ. மீ. நீளம் உடையவை; நன்கு வழவழப்பாக்கப்பட்டு இருபுறமும் கறுப்பு நிறம் பூசப்பட்டவை. இவற்றுள் சிறியவையும் காணப்படுகின்றன. இவை உடைகளை மாட்டி வைக்கச் சுவர்களில் செருகப் பயன்பட்டவை (Coal Stand) ஆகலாம். பளிங்குக் கல், சுண்ணாம்புக்கல், கறுத்த பச்சைக் கல் போன்ற கடின பொருள்களைக் கொண்டு செய்யப்பட்ட கதாயுதம் போன்றவை கிடைத்துள்ளன. கொண்டை ஊசிகள், பொத்தான்கள், முகம் பார்க்கும் கண்ணாடிகள், கண்ணுக்கு மை தீட்டும் ஊசிகள், பதுமைகள், மணிகள், பாண்டங்கள் முதலியனவும் செம்பாலும் வெண்கலத்தாலும் செய்யப் பட்டுள்ளன. பொன்னாற் செய்யப்பட்ட கொண்டை ஊசிகள் மூன்று கிடைத்துள்ளன. பொத்தான்கள் எலும்புகளாலும் செய்யப்பட்டுள்ளன. பொன், வெள்ளி, செம்பு, வெண்கல்ம், உயர்தரக்கல் முதலியவற்றால் அணிகலன்கள் செய்யப்பட் டுள்ளன. வெள்ளி, செம்பு, வெண்கலம், காரீயம், கல், மீண் முதலியவற்றால் பாத்திரங்கள் செய்யப்பட்டன. எனவே, சிந்துப் பிரதேச மக்கள் இந்த உலோகங்களைக் கொண்டு: தம் வீட்டிற்கு வேண்டிய பாத்திரங்களையும், தமக்கு வேண்டிய அணிகலன் களையும், கருவிகளையும் செய்து நாகரிக வாழ்க்கை நடத்தி வந்தனர் என்பது தெளிவாதல் காண்க.

சாணைக் கல்

மொஹெஞ்சொ-தரோ மக்கள் கத்திகளையும் பிறகருவி களையும் தீட்டிக் கூர்மை ஆக்குவதற்குங் பொதுவாகச் செங்கற்களையே சாணைக் கற்களாகப் பெரிதும் பயன்படுத்தினர்; சிறப்பாகக் கருங்கல், வழவழப்புள்ள கல் முதலியவற்றையும் சாணைக் கற்களாகப் பயன்படுத்தினர். வேறு சில கற்கள் உலோகங்களை மெருகிடுதற்கென்றே பயன்பட்டன.