பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விலங்குகளும் பறவைகளும்

121


அவற்றைப்போன்ற ஆடுகளின் எலும்புக்கூடுகளே மொஹெஞ்சொ - தரோவிலும் ஹரப்பாவிலும் கிடைத்துள்ளன. அவ்வாடுகள் சிந்துப் பிரதேசத்தின் மேற்குமலைப் பிரதேசத்துக் காடுகளில் ஏராளமாக இருந்தனவாதல் வேண்டும். மலையாடுகளைப் போன்றே ஒவியங்கள் தீட்டப்பெற்ற மட்பாண்டங்கள் சிந்துப் பிரதேசம் முதல் சுமேரியா வரையுள்ள சிறப்பான இடங்களில் கிடைத்துள்ளன. எனவே, அள்வரையாடுகளின் இறைச்சி சிந்துப் பிரதேச மக்களின் உணவுப் பொருள்களுள் ஒன்றாகச் சிறந்திருந்தது என்பதில் ஐயமில்லை.

கழுதைகள்

மொஹெஞ்சொ-தரோவில் கழுதைகள் இருந்தனவாகத் தெரியவில்லை; ஆனால், ஹரப்பாவில் இருந்தன. என்னை? அங்குக் கழுதைகளின் எலும்புக்கூடுகள் கிடைத்தன ஆதலின் என்க. ஆயினும், சிந்துப் பிரதேசத்துக் கழுதைகள் பயன்பட்ட விதம் உணருமாறில்லை. என்னை? பொதி சுமக்கவும் வண்டி இழுக்கவும் எருதுகளே பெரிதும் பயன்பட்டன. ஆதலின் என்க. சுமேரியாவிலும் இங்ஙனமே எருதுகள் பயன்பட்டன.

மான்கள்

பலவகை மான்களின் கொம்புகளும், எலும்புகளும் சிந்துப் பிரதேசத்திற் கிடைத்துள்ளன. அங்குப் புள்ளிமான்களும் கலைமான்களுமே மிக்கிருந்தன. இவற்றின் கொம்புகட்கும் இறைச்சிக்குமே சிந்துப் பிரதேசத்தவர் இவற்றை வளர்த்து வந்தனர். வேட்டையாடி வந்தனர். மான் கொம்பும் குளம்பும் மருந்துக்கும் பயன்பட்டிருத்தல் வேண்டும்.

எருமைகள்

மண்ணாலும் செம்பாலும் இயன்ற எருமைப் பதுமைகள் சில கிடைத்துள்ளமையால், சிந்துப் பிரதேசத்தில் எருமைகள் இருந்தன எனக் கூறலாம். ஆயின், சிந்துப் பிரதேசத் தட்ப