பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

மொஹெஞ்சொ - தரோ


வெப்ப நிலைகள் காரணமாக, அங்கு அவை நீண்டநாள் உயிர்வாழக் கூடவில்லை என்று அறிஞர் அறிவிக்கின்றனர்.

ஒட்டகம்

மிகச் சில ஒட்டக எலும்புக்கூடுகளே சிந்துப் பிரதேசத்திற் கிடைத்தன. எனவே, அவை அங்குப்பலவாக இருந்தில எனக் கூறல் மிகையாகாது. மேலும் இவை அரேயியாவிலிருந்தே அப் பழங்காலத்தில் கொண்டு வரப்பட்டன எனக் கூறுதல் பொருத்தமானது.

முயல்கள்

முயல் மிகப் பழையகால விலங்கு என்பது உயிர் நூற் புலவர் முடிபு. முயல்களின் எலும்புகள் பல சிந்துப் பிரதேசத்திற் கிடைத்தன ஆதலின், முயல் உணவு சிறந்த உணவாகக் கருதப்பட்டிருக்கலாம் என்று அறிஞர் எண்ணுகின்றனர்.

ஆமை முதலியன

ஆமை ஒடுகள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. ஆமை இறைச்சி உணவாகக் கொள்ளப்பட்டது. ஆமை ஒடுகள் வேறு காரியங்கட்கும் பயன்பட்டன. அங்கு முதலை இறைச்சியும் பயன்பட்டது. அங்குக் கீரி, குரங்கு, அணில், எலி இவை மிக்கிருந்தன என்பது விளையாட்டுப் பதுமைகள் மூலம் உணரக்கிடக்கிறது. எலிப்பொறிகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால், அங்கு எலிகள் துன்பம் பொறுக்க முடியாதபடி, இருந்தது புலனாகிறது.

பறவைகள்

இவற்றுள் மொஹெஞ்சொ-தரோ மக்கள் பெரு விருப்பமுற்று வளர்த்தவை கிளிகளே ஆகும். என்னை? கிளிகள் போலச் செய்யப்பட்டுள்ள பதுமைகள் அங்குப் பலவாகக் கிடைத்துள்ளமையால் என்க. பல பதுமைகளும் ஊது குழல்களும்