பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விலங்குகளும் பறவைகளும்

123


கேர்ழி வடிவத்தில் செய்யப்பட்டு உள்ளமையால் கோழிகளும் பலவாக இருந்திருத்தல் வேண்டும் என்பது தெளியலாம். கோழிச் சண்டை[1] அக்காலத்தில் இருந்தது என்று அறிஞர் கருதுகின்றனர். எனவே சண்டைக்கு என்றே கோழிகள் தயாராக்கப்பட்டன என்பதும் அறியத்தக்க செய்தியே ஆகும், ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட தாழிகள் மீது மயிலே சிறப்புறத் திட்டப்பட்டிருத்தலால், பண்டை மக்கள் மயிலை நன்கு அறிந்திருந்தனர் என்பது தெளிவாம். புறாக்களின் பதுமைகளைக் கொண்டு சிந்துப் பிரதேசத்தில் புறாக்கள் இருந்தன என்பதை அறியலாம். இப்பதுமைகள் மெசொபொட்டேமியாவில் கிடைத்த பறவைப் பதுமைகளை ஒத்துள்ளன. ஒரு பெண் பதுமையின் தலை மீது இரண்டு புறாக்கள் இருப்பதுபோலச் செய்யப் பட்டுள்ளன. இவை அன்றி மைனாக்கள், பருந்துகள் போன்றவையும் அங்கு இருந்தன என்னலாம்.

நாகங்கள்

ஹரப்பாவில் பாம்புப் பதுமைகள் கிடைத்துள்ளன; சில முத்திரைகள் பாம்பு படம் விரித்தாற் போலச் செதுக்கப் பட்டுள்ளன. சில பாண்டங்கள் மீதும் பாம்பு உருவம் தீட்டப் பட்டுள்ளது. அக்கால மக்கள் பாம்பை வணங்கி வந்தனர்; பாம்பிற்குப் பால் வார்த்தனர் என்று எண்ணுதற்குரிய குறிகள் காணப்படுகின்றன.


  1. கோழிச்சண்டை மிகப் பழைய காலமுதலே தமிழகத்தில் உண்டு என்பதைப் புறப்பொருள் நூல்களால் உணர்க.

2. Dr. Mackay’s ‘The Indus Civilization’ p.83.