பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உணவும் உடையும்

129


னும் இடத்திலும், சிரியாவிலும் கிடைத்துள்ளன. இத் தலை முண்டாசுகள் பருத்தியால் ஆனவை; நிமிர்ந்து விசிறிபோல விரைப்புடன் இருக்குமாறு ஓரங்களில் பட்டை வைத்துத் தைக்கப்பட்டவை; கனமானவை. இத்தகைய முண்டாசுகளை மங்கோலிய மகளிர் இன்றும் தலையில் அணிகின்றனர் என்பது நன்கு கவனித்தத் தக்கது.[1]

கால் சட்டையோ?

தெய்வங்கள் எனக் கருதப்படும் ஆண் உருவங்கள் சில, முழங்கால் அளவுவரை துண்டுகளை உடுத்தியுள்ளன போலத் தோன்றுகின்றன. ஆயின் ஒரு படிவம் மட்டுமே முழங்காலுக்குக் கீழே தொங்குமாறு வேட்டிகட்டியுள்ளதுபோலத் தோற்றுகிறது. உட்கார்ந்திருக்கும் மற்றோர் ஆண் உருவம் நீண்ட வேட்டியுடன் காணப்படுகிறது. ஹரப்பாவில் கிடைத்த மட்பாண்டத்தின் மீதுள்ள ஒவியம் ஒன்றில் காணப்படும் மனித உருவம் கால் சட்டை அணிந்திருப்பது போலத் தோற்றுகிறது. ஆயின், அது கால்சட்டை அன்று நீண்டவேட்டிஒன்று காற்றில் காலைச்சுற்றிக் கொண்டபோது காணப்படும் நிலையினையே அது குறிப்ப தாகும்’, என்று சிலர் செப்புகின்றனர். உண்மை உணரக் கூடவில்லை.

கூத்த மகள்

மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்த படிவங்களுள் வெண்கலத்தை உருக்கி வார்த்துச் செய்யப்பட்ட கூத்த மகள் சிலையே மிகச் சிறந்ததாகும். இவ்வொன்றுதான் ஆடையே இன்றிக் காணப்படுகின்றது. இதைப்போலவே ஹரப்பாவிலும் வெண்கலப் படிவம் ஒன்று கிடைத்துள்ளது. அப்பெண் படிவங்கள் நீக்ரோ இனப்பெண்ணைக் குறிப்பனவாகவே தோற்று கின்றனவாம். அப்பதுமைகள் இரண்டும் நடனச் செயலைக் குறிக்கின்றன. மொஹெஞ்சொ- தரோவிற் கிடைத்த சிலையின்


  1. Dr.E. Mackay’s ‘The Indus Civilization’, p. 135.