பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

மொஹெஞ்சொ - தரோ


புதைக்கப்பட்ட நகைகள்

வெள்ளி, செம்பு முதலிய கலன்களில் இந்நகைகளை வைத்து, நிலத்தின் அடியிலும் கவர்களிலும் அப்பண்டை மக்கள் ஒளித்து வைத்திருந்தனர். இதனால், அம்மக்கள் தங்கள் நகரத்திற்கு உண்டாக இருந்த அழிவை எண்ணி இங்கினம் அணிகளை மறைத்து வைத்தனர் என்பதும், அச்சம் நீங்கிய பின்னர் வந்து அவற்றை எடுத்துக் கொள்ளலாம் என எண்ணினர் என்பதும், வெளியாம். ஆனால், அவர்கள் எண்ணியபடி திரும்பிவரக் கூடவில்லை போலும்!

புதையுண்ட வெள்ளிக் கலன்கள்

ஒரு வீட்டின் அடியில் தோண்டி எடுக்கப்பட்ட அணிகளுள் வெள்ளிப் பாத்திரம் என்று குறிப்பிடத்தக்கது. அதனுள் கழுத்து மாலைகள் பலவும், கடினமான உயர்தர மணிகள் பலவும் இருந்தன. அவ்வெள்ளிக் கலன் புதையுண்டிருந்த இடத்தில் வேறுபல அணிகள் மண்ணுள் புதையுண்டு கிடந்தன. அவற்றை எடுத்த இராய்பகதுர் தயாராம் சஹ்னி என்பவர், இந்த வெள்ளிக் கலனும் இதைச் சுற்றிப் பூமியிற் புதையுண்டு கிடந்த அணிகளும் ஒரு பருத்தித் துணியில் கட்டப்பட்டுப் புதைக்கப் பட்டிருத்தல் வேண்டும். அத்துணி அழிந்த பின்னர் இவை இங்ஙனம் மண்ணுள் புதையுண்டன என்று கூறியுள்ளார்.

பிறிதோர் வீட்டின் அடியில் இராய்பஹதூர் தீக்ஷஜித் என்பார் வெள்ளிக் கலன் ஒன்றைக் கண்டெடுத்தார். அதனுள் கழுத்து மாலைகளும் பளபளப்புள்ள கல்மணிகளும் உலோகத்துண்டுகளும் பொன்னாற் செய்யப்பட்டதலை நாடாக்களும் இருந்தன.

புதையுண்ட செம்புக் கலன்

வேறோர் இடத்தில் செம்ப்க் கலன் ஒன்று புதையுண்டு கிடந்தது.அதற்குள் தங்கக்கொண்டைஊசிகள், பெரிய வெள்ளிக் காதணிகள், சிவப்புக் கல் மணிகள், பிற அணிகலன்கள் இருந்தன.