பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

மொஹெஞ்சொ - தரோ


‘சிந்துப் பிரதேச மகளிர் நீலக் கல் பதித்த முக்கணிகளை அணிந்திருந்தனர் எனக் கூறலாம்’ என்று பாட்ரிக் கார்லிடன் என்பார் அறிவிக்கிறார்.[1] சிந்துப்பிரதேச ஆராய்ச்சிக்கென்றே சிறப்பான ஆராய்ச்சியாளராக இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட டாக்டர் மக்கே என்பவர், ‘அக்கால மாதர் மூக்கணிகளைப் பயன்படுத்தினர்; நீல நிறமுடைய பீங்கான் துண்டுகளையும் பயன்படுத்தினர்; ஒருவகை நீல அரக்கில் மேற்புறம் தட்டையாகச் செய்தோ, கற்கள், உலோகத் துண்டுகள், ஒவியங்கொண்ட துண்டுகள் முதலியவற்றைப் பொருத்தியோ மூக்கணிகளைப் பயன்படுத்தினராதல் வேண்டும்’ என்று துணுக்கமாக ஆராய்ந்து கூறுகின்றார்.[2] ‘ஹரப்பா நகரத்து மகளிர், சுற்றிலும் பற்களைக் கொண்ட சக்கரம் போன்ற அழகிய சிறிய தகடுகளை மூக்கணிகளாகப் பயன்படுத்தினர் என்று அறிஞர் வாட்ஸ் வரைந்துள்ளார்.[3]

மோதிரங்கள்

மோதிரங்கள் பலவாகக் கிடைத்துள்ளன. சில, கம்பிகளாகச் செய்து பட்டையாகத் தட்டப்பட்டுள்ளன. பல, உலோகத்தைச் சுருட்டி வைத்து மோதிரமாக அடித்துச் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான மோதிரங்கள் செம்பு, வெண்கலம், சங்கு சிப்பி இவற்றால் செய்யப்பட்டுள்ளன. ஹரப்பாவில் தங்கமோதிரம் ஒன்றும் வெள்ளி மோதிரம் ஒன்றும் கிடைத்தன. ஒரு மோதிரம் சதுர முகப்பு வைத்துச் செய்யப்பட்டுள்ளது. அம்முகப்பின் மீது குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. பீங்கான் மோதிரம் ஒன்றும் ஹரப்பாவில் கிடைத்தது.


  1. ‘His Buried Empires’, p.154.
  2. Dr.E.Mackay’s The Indus Civilization’ p. 115.
  3. M.S.Vat’s ‘Excavations at Harappa’, Vol. I pp.60-64.