பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிகலன்கள்

143


மற்றொன்றின் தலைப்புறம் வெண்கல்லால் ஆனது. அஃது, இரண்டு குரங்குகள் ஒன்றை ஒன்று அணைத்துக்கொண் டிருப்பனபோலச் செய்யப்பட்டுள்ளது. மற்றுஞ் சில தலைப் புறங்கள் தாமரை வித்துகள் போலவும், வேறு பலவகையாகவும் செய்யப்பட்டுள்ளன.

சமயத் தொடர்புள்ள பதக்கம்

கழுத்து மாலைகளில் கோக்கப்பட்டன போல இன்றித் தனிப்பட்ட வேலைப்பாடு கொண்ட பதக்கம் ஒன்று மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்துள்ளது. இது 7 செ. மீ. நீளமும் 6 செ.மீ அகலமும் உள்ளது; வட்ட வடிவமானது. இது வெண்மை கலந்த மஞ்சள் நிற மாக்கல்லில் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது பிறை போலச் செதுக்கப்பட்டுள்ளது. இப்பிறையில், ஒற்றைக் கொம்புடைய எருதின் உருவம் காணப்படுகிறது. அதன் எதிரில் தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது; பிறையின் முனைகள் சேருமிடத்தில் ஏதோ ஒன்று தொங்குதல் போலக் காணப்படுகிறது. இப்பதக்கத்தில் செதுக்கு வேலை நிரம்பியுள்ளது. இதனுள் பலநிறச் சாந்துகள் அப்பியிருத்தல் கூடியதே. இப்பதக்கம் தங்கத் தகட்டில் வைத்துப் பதிக்கப்பட்டிருத்தல் வேண்டும். அத்தகட்டின் தலைப்புறத்தில் மாட்டிக்கொள்ளத் தக்கபடி வளையம் இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். இது சமயத் தொடர்புடைய பதக்கமாக இருத்தல் வேண்டும்.[1]

பலவகைக் கற்கள்

சிந்துப்பிரதேசத்திற் கிடைத்த பலவகைக் கையணிகள், கழுத்து மாலைகள், இடைப்பட்டைகள், மோதிரங்கள் இன்னபிற அணிகளில் பதிக்கப்பட்டுள்ளவையும் தனியே கிடைத்துள்ளவை யுமான பலவகை வியத்தகு மணிகள் யாவை? அவை இரவைக் கற்கள், சிவப்பு, மஞ்சள், நீலம், சூரிய காந்தக் கற்கள், வைடுரியம்,

  1. Dr.E.Mackay’s The Indus Civilization’, p.110.