பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

மொஹெஞ்சொ - தரோ


இரத்தினக் கற்கள், தூய்மை செய்யப்படாத வைடூரியம், கோமேதகம், இரத்தம் போன்ற செந்நிறமுடைய மாணிக்கம், வயிரம், பாம்புக்கல், கூரிய ஒருவகைக் கற்கள், ‘அமெஸான்’ எனப்படும் ஒருவகைப் பச்சைக் கல், வேறு (பல்வேறுபட்ட) கற்கள்,[1] ஸ்படிகம், உலோகக் கலவைக்கல், பளிங்குக்கல் முதலியன ஆகும். நீலம் ஒன்றைத் தவிர, பிற கல் வகைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானம், காஷ்மீர், திபேத், வடபர்மா, பிற இந்திய மண்டிலங்கள் ஆகிய பல இடங்களிலிருந்தே வரவழைக்கப்பட்டவை.

இக் கல்மணிகள் இன்றிச் சங்கு, சிப்பி, பீங்கான், களிமண் முதலியவற்றாலும் மணிகள் செய்து பயன்படுத்தப்பட்டன.

மணிகள் செய்யப்பட்ட விதம்

சிந்துப் பிரதேச மக்கள் கற்களைச் சோதித்து அவற்றின் தன்மைக்கேற்ற முறையில் உருவாக்கி வழவழப்பாகத் தேய்தது மெருகிட்டுள்ளனர் இவ்வேலைப்பாட்டிற்குத் தேவைப்பட்ட கடைச்சல் இயந்திரங்கள் அவர்களிடம் இருந்திருத்தல் வேண்டும். அவை இன்றேல், இவ்வேலைப்பாடுகள் கற்களில் காணப்படா. கற்கள் உருவாக்கப்பட்ட பின்னரே நுண்ணிய கூர்மையான கருவிகளைக் கொண்டு துளையிடப்பட்டன. அங்குக் கிடைத்த பல மணிகள் துளையிடப்படாமல் இருப்பதைக்கொண்டு இங்ஙனம் கருதப்படுகிறது. அத்துளையிடப்படாத கற்கள் மொஹெஞ்சொ-தரோவின் இறுதிக் காலத்தினவாதல் வேண்டும். வேலை முடிவதற்குள் நகரம் துறக்கப்பட்டுவிட்டது. அம்மக்கள், சில சந்தர்ப்பங்களில் இரண்டு மூன்று வகையான கற்களை ஒட்ட வைத்து, அவற்றின் மணிகளைக் கடைந்திருக்கின்றனர். இத்தகைய மணிகளே மிக்க வேலைப்பாட்டுடன் காணப்படுகின்றன. இவ்வாறு பீப்பாய் போன்ற 1செ.மீ நீளத்தில் உள்ள மணி


  1. Haliotrope, Plasma, Lapis-lazuli, Tachylite, Chalcedony, Napheline-Sodalite. Ibid, p.110.