பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிபம்

155


(7) நன்றாக வளைந்து முறுக்குண்ட கொம்புகளையுடைய செம்மறியாடுகளைக் குறிக்கும் சித்திரங்கள் சில மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்துள்ளன. அவை மொரேவியா, கிரீட் தீவு, அனடோலியா, எகிப்து சுமேரியா, ஏலம் என்னும் பண்டை நாடுகளில் மிக்கிருந்தன.

(8) மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த புதுவகைக் கோடாரி ஒன்று சுமேரியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருத்தல் வேண்டும். என்னை? அத்தகைய பல கோடரிகள் அங்குக் கிடைத்துள்ளன. ஆதலின் என்க.

(9) மீன் பிடிக்கப் பயன்பட்ட வலையின் ஒரங்களில் கட்டப்பட்டிருந்த மண் குண்டுகள் இரு நாடுகளிலும் ஒரு விதமாகவே கிடைத்தன.[1]

(10) ‘உர்’ நகரத்தில் தோண்டி எடுக்கப்பட்ட அரசர் தம் கல்லறைகளில் தீட்டப்பட்ட சித்திரங்களுட் குரங்கு ஒன்றாகும். அஃது அந்நாட்டு மக்கட்குத் தெரியாத விலங்கு. எனவே, அந் நாட்டவர் நெருக்கமான வாணிபத்தொடர்புகொண்டிருந்த சிந்து வெளி மக்களிடமிருந்தே குரங்கினைப் பெற்றவராதல் வேண்டும்.

(11) மேற் சொல்லப்பட்ட கல்லறைகளில் சிறந்த வேலைப்பாட்டுடன் கூடிய இரத்தின மணிகள் கிடைத்தன. அவையும் சிந்துவெளியிலிருந்தே சென்றனவாதல் வேண்டும்.

(12) கூந்தலைத் தலையைச் சுற்றிலும் வாரிச் செருகிப் பின்புறம் கற்றையாக முடிதலும், வெவ்வேறு முறைகளில் முடிதலும் அவற்றின்மீது கொண்டை ஊசிகளைச் செருகுதலும் இரு நாட்டாரும் பொதுவாகக் கொண்டிருந்த பழக்கமாகும்.[2]

(13) சிந்து வெளி மக்கள் யானைத் தந்தம், யானைத் தந்தத்தாலான சிப்புகள், சதுரங்க விளையாட்டுக் கருவி


  1. Dr.E.J.H.Mackay’s ‘Further Excavations at Mohenjo-Daro’.p.640.
  2. Patrick Carletoo’s ‘Buried Empires’, pp. 160, 161.