பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிபம்

157


எனக் கூறுதல் பொருந்தும். அவற்றின் அமைப்பு முறை ஹரப்பாவிற் கிடைத்தவற்றிலிருந்து நன்கு அறியக் கிடக்கிறது.[1] அவை சுமேரியாவிலும், கீரீட் தீவிலும் கிடைத்துள்ளன.

(18) மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த படிவங்களில் உள்ளபடி மீசையைக் சிரைத்துத் தாடியைப் பலவாறு வைத்துக்கொள்ளும் முறை சுமேரியாவிலும் காணப்படுகிறது.

(19) பூசனைக்குரிய தட்டுகளைத் தாங்கும் தண்டுகள் பல சிந்து வெளியிலும் சுமேரியாவிலும் ஒன்று போலவே கிடைத்துள்ளன.

(20) எழுத்துக் குறிகள் சிறிது வேறுபடினும் அடிப்படை ஒன்றாகவே இரண்டு இடங்களிலும் காணப்படுகிறது.[2]

(21) சிந்து வெளியிற் கிடைத்த கோடரிகளைப் போன்ற வெண்கலக் கோடரி ஒன்று காகஸஸ் மலைநாட்டைச் சேர்ந்த ‘கூபன்’ ஆற்றுப் படுகையிற் கிடைத்தது.

(22) விசிறிபோன்ற தலைமுண்டாசு துருக்கியில் உள்ள ‘அடலியா’ என்னும் இடத்திற் கிடைத்த பதுமைகளிலும், சிரியாவிற் கிடைத்த சித்திரம் ஒன்றிலும் சிந்து வெளியிற் கிடைத்த சித்திரங்களிலும் ஒத்தே காணப்படுகிறது.

(23) நாணற் பேனா ஒன்று மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்தது. அது போன்ற எழுதுகோல் கிரீட் தீவில் பாத்திரங்கள் மீது எழுதப் பயன்பட்டதாகத் தெரிகிறது. அப்பேனர் உரோமர்கள் காலம் வரை எகிப்தியருக்குத் தெரியாததாகும்.[3]


  1. M.S.Vats’s Excavations at Harappa, ‘Vol, II, pl xci 193-199, 295.
  2. Dr.Mackay’s ‘The Indus Civilization’, pp.142, 154.
  3. Dr.Mackay’s ‘Further Excavations at M-daro, pp.215, 340.