பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிபம்

161


தாக்குகளில் ஒழுங்கான ஆராய்ச்சி நடைபெறுமாயின், பல உண்மைகள் வெளியாகும்.[1]

நிலவழி வாணிபம்

சிந்து வெளிக்கு ஜேட் (lade) என்னும் ஒருவகைக் கல் நடு ஆசியாவிலிருந்து வந்துகொண்டிருந்தது. அக்கல் சிந்து வெளி மூலம் தென் பாரசீகம், இரர்க், சுமேரியா, சிரியா, எகிப்து ஆகிய நாடுகட்கு அனுப்பப்பட்டது. எனவே, அக்காலத் தரைவழி வாணிபம் ஏறக்குறைய 4800 கி.மீ. தொலைவில் நடந்து வந்தது என்பது அறியத்தகும்.[2]

இத்தரை வழி வாணிபத்திற்கு அப்பண்டை மக்கள் எருதுகளையும் கோவேறு கழுதைகளையும் பயன்படுத்தினர். அவற்றுள்ளும் எருதுகளே மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டன. சுருங்கக் கூறின், எருதுகளே அப்பண்டைக்கால வாணிபத்தை வளர்த்தன என்னலாம். இந்தக் காரணம் ஒன்றைக் கொண்டே அப்பண்டைமக்கள் எருதை உயர்வாக மதித்து அன்பு காட்டினர் என்பதும் மிகையாகாது.

பண்டைக்காலப் பலுசிஸ்தானம்

அப்பழங்காலத்தில் ւலுசிஸ்தானம் செழுமையுடையதாக இருந்திருத்தல் வேண்டும் மக்கட் பெருக்கம் உடையதாகவும் இருந்திருத்தல் வேண்டும். அவருட் சிலரேனும் மேற்சொன்ன தரைவழி வாணிபத்திற் பங்கெடுத்தனராதல் வேண்டும் சிந்து வெளி மக்களோடு நெருங்கிய உறவானவராகவும் இருத்தல் வேண்டும்; அம்மக்களது மேற்குப்புற வாணிபத்திற்குப் பேருதவி புரிந்தினராதல் வேண்டும்.[3]


  1. K.N.Dikshit’s Pre-historic Civilization of the ‘IV’. p.12
  2. E.W.Green’s ‘An Atlas of Indian History’.
  3. Mackay’s ‘The Indus Civilization’, p. 19.