பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிபம்

163


நிறையுடையதாக இருக்கிறது. பெரிய வியாபாரத்திற்கே அக்கற்கள் பயன்பட்டனவாதல் வேண்டும். இந் நால்வகைக் கற்களும் கருங்கல், பளிங்குக்கல், பச்சைக்கல், மங்கிய சிவப்புக்கல் முதலிய பலதிறப்பட்ட கற்களால் அழகுறச் செய்யப்பட்டுள்ளன. சிந்து வெளியினர். இக்கற்களை வேண்டிய வடிவத்தில் வெட்டி, சானைக்கல் போன்ற கற்பலகைமீது நன்றாகத் தேய்த்து, இறுதியில் மெருகு கொடுத்து வந்தனர். ஒரு நிறைக்கல்லிலேனும் ‘எண்’ இடப்படாதது வியப்புக்கு உரியது. சிறு கூழாங்கற்களும் நிறைகளாகப் பயன்பட்டன.

நிறை அளவுகள்

மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த நிறைகளையும் ஹரப்பாவிற் கிடைத்தவற்றையும் செவ்வையாகச் சோதித்த அறிஞர் ஏ.எஸ்.ஹெம்மி என்பவர். அவர், சிறிய நிறைகள் இரட்டை எண்களைக் குறிப்பன. பெரியவை தசாம்ச பின்ன அளவை உடையன. அவை 1, 2, x8, 4, 8, 16, 32, 54, 160, 200, 320, 640, 1500, 3200, 5400, 8000, 12800 ஆகிய எண்களைக் குறிப்பன. ‘ஒன்று’ (குறிப்பிட்ட ஒரு நிலைத்த நிறை - ‘unit') என்பது 0.8565 கிராம் ஆகும். இவை முற்றும் சிந்து வெளிக்கே உரிய நிறைகள் ஆகும். இவற்றுள் ஒன்றிரண்டு பிற நாட்டு நிறைகளுடன் ஒப்பிடத் தக்கன ஆயினும், இந்நிறைகள் இயல்பாகவே செய்யப்பட்டனவே யாம்’, எனக் கூறியுள்ளார். இந் நிறைக் கற்கள் அளவிறந்தனவாக இருத்தலைக் காணின், மொஹெஞ்சொ-தரோ சிறந்த வாணிபப் பெருக்கமுடைய நகரமாக இருந்தது என்பது அங்கைக் கனிபோல் ஐயமற விளங்குகிறது.

தராசுகள்

தட்டுகள் செம்பாலும் தண்டு வெண்கலத்தாலும் செய்யப்பட்ட தராசு ஒன்று மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்தது. அதன் தோற்றம் உயரியதாக இல்லை. எனினும்,