பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

மொஹெஞ்சொ - தரோ

னர் தோட்டிகளை வைத்திருந்தனர் என்பதை நன்கு உணரலாம்.

காவல் தொழில்

பெரிய மாளிகைகளின் முன்புற அறைகளும் தெருக் கோடிகளில் இருந்த அறைகளும் காவற்காரர்க்கு உரியவை என்பது முன்னர்க் கூறப்பட்ட தன்றோ? மொஹெஞ்சொ-தரோ, ஹரப்பா என்னும் பெரிய நகரங்கள் வாணிபப் பெருக்குடையன - ஆதலின், அவற்றைக்காக்க வேண்டிய பொறுப்பு அந்நகரக் கழகத் தாரையோ-அரசரையோ சார்ந்ததாகும். அவர்களால் அமர்த்தப் பட்ட பாதுகாவலர் பலர் நகரங்களைப் பாதுகாத்து வந்தனர்.[1]

கப்பல் தொழில்

சிந்து வெளி மக்கள் ஆற்று வாணிபத்திலும் கடல் வாணிபத்திலும் சிறந்திருந்தனர். ஆதலின், ஆறுகளுக்கு வேண்டிய படகுகளையும் கடற் செலவுக்குரிய கப்பல்களையும் கட்டத் தெரிந்திருந்தனராதல் வேண்டும். மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த முத்திரை ஒன்றில் படகின் உருவம் காணப்படுகிறது. அதிற் பாய்மரம் இல்லை. சுக்கானும், படகின் நடுவில் ஒர் அறையும், மீகாமன் இருக்க இடமும் உள்ளன. அப்படகின் அமைப்பைக் கொண்டு, அக்காலப் படகுகளை நாம் ஒருவாறு அறிந்துகொள்ளலாம். அவை நாணற்கோல்கள் கொண்டு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். இங்ஙனம் செய்யப்பட்ட படகுகள் பண்டை எகிப்திலும் இருந்திருக்கின்றன. மட்பாண்ட ஒட்டில் தீட்டப்பட்டிருந்த ஒவியம் ஒன்று படகினும் வேறுபட்டதாகக் காணப்படுகிறது. அதன் இருபுறங்களும் வளைந்து உயர்ந்து காணப்படுகின்றன. நடுவில்அறையே இல்லை;


  1. பண்டைத் தமிழ் நாட்டுக் காவற்காரர் ‘களவு நூலைக்கற்றவர். கள்வர் போக்கை உணர்ந்து மறைந்து. நின்று பிடிப்பவர்’ என்னும் சுவை பயக்கும் செய்திகளை மதுரைக் காஞ்சி முதலிய நூல்களால் உணர்க