பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுகள் - தொழில்கள்- கலைகள்

177


180 செ.மீ. உயரத்தில் பாய் மரம் இருக்கிறது. சுக்கானும் உளது. அப்படகு ஆற்றிலும் கடலிலும் பயன்பட்டதாதல் வேண்டும்.[1] எனவே, சிந்து வெளி மக்கள் படகுகளைக் கட்டவும் வேறு வகைக் கப்பல்களைக் கட்டவும் அறிந்திருந்தனர் என்பது தெளிவாம்.

பயிர்த் தொழில்

நெல், கோதுமை, வாற்கோதுமை, எள், பருத்தி முதலியன பயிரிடப்பட்டன. எனவே, உழவு சிறப்புற்ற தொழிலாகவே இருந்துவந்த தென்னலாம். வயல்கட்கு வேண்டிய நீரைச் சிந்து யாறே தந்து வந்தது. அம்மக்கள் சிந்து யாற்றுநீரைக் கால்வாய்கள் மூலம் கொண்டு சென்று வயல்களிற் பாயச் செய்திருத்தல் வேண்டும். கலப்பைக்காரர்களும் அரிவாள்களும் கிடைத்தமை கொண்டும் சிறிது கோதுமை இருந்ததைக் கொண்டும் பயிர்த்தொழில் சிறப்புடைய தொழிலாகக் கருதப்பட்டதென்பது வெளியாகும்.

நெசவுத் தொழில்

மொஹெஞ்சொ-தரோவில் உள்ள வீடுகள் பலவற்றுள் நெசவுத் தொழில் நடந்து வந்தது என்பதை அறிவிப்பன் போலக் ‘கதிர்கள்’ பல கிடைத்துள்ளன. அவை பளிங்காலும் சங்கினாலும் களி மண்ணாலும் செய்யப்பட்டவை. எனவே, செல்வர் முதல் வறியர் ஈறாக இருந்தவர் அனைவரும் நூல் நூற்றலில் ஈடுபட்டிருந்தனர் என ஒருவாறு கூறலாம். சிந்து வெளியிற் பருத்தியே மிகுதியாகப் பயன்பட்டது. கம்பள ஆடைகள் ‘இருந்தில’ என்று சிலரும், இருந்திருக்கலாம் என்று சிலரும் கூறுகின்றனர். நாரினாற் செய்யப்பட்ட ஆடைகள் பிற இடங்களிலிருந்து தருவிக்கப்பட்டன. ‘கித்தான்’ போன்ற தடித்த துணியும் பயன் படுத்தப்பட்டது. மொஹெஞ்சொ-தரோவில் 5000 ஆண்டுகட்கு


  1. Mackay’s ‘The Indus Civilization’ p.175. Mackay’s ‘Further Excavations at Mohenjo-Daro’ Vol.I. p.340