பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுகள் - தொழில்கள்- கலைகள்

179


தலைக்கொண்டு. அவை சிந்து வெளியிலிருந்தே போயிருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் கூறுவதால், தந்த வாணிபமும் நடைபெற்றிருக்கலாம் என்று கருத இடம் உண்டு.

மணி செய்யுந் தொழில்

பற்பல இடங்களிலிருந்து உயர்தரக் கற்களை வரவழைத்து, அவற்றை அறுத்துப் பற்பலவித மணிகளாக்கி மெருகிட்டுச் செவ்வைப்படுத்தும் தொழில் வல்லார் பலர் இருந்தனர் என்பது, சிந்து வெளியிற் கிடைத்துள்ள அளவிறந்த மணிகளைக் கொண்டு எளிதில் அறியலாம். அம்மணிகளில் ஒரே அளவுள்ள வழவழப் பான துளைகள் கிடைந்துள்ளதைக் கண்டு ஆராய்ச்சியாளர் வியப்புறுகின்றனர் எனின், அத்தொழில் வல்லார் வைத்திருந்த நுண்ணிய கருவிகளையும் அவர்தம் ஆற்றலையும் என்னெனப் பாராட்டுவோம்! சுருங்கக் கூறின், அவ்வேலை முறையே இன்றுள்ள மணி வேலைகட்குப் பிறப்பிடம் என்னல் மிகையாகாது.

பாய் பின்னுதல்

மாடங் கட்டியவர் பயன்படுத்திய கோரைப் பாய் ஒன்று பழுதுற்ற நிலையிற் கிடைத்தது. சிந்து ஆற்றுப் படுகையில் கோரையும் நாணலும் இயல்பாகக் கிடைத்தமையின், சிந்து வெளி மக்கள் அவற்றைக் கொண்டு பாய்களைப் பின்னிக் கொண்டனர்; கூரைகளை அமைத்துக் கொண்டனர். எனவே, பாய் பின்னுந் தொழில் அங்கு இருந்தது என்பது தோற்றம்.

எழுதக் கற்றவர்

சிந்து வெளி மக்கள் எழுதக் கற்றவர் ஆவர். இதனை, அவர்கள் வெளியிட்டுள்ள செம்பு நள்ணயங்களாலும் 1000க்கு மேற்பட்ட முத்திரைகளாலும் மட்பாண்டங்கள் மீது தீட்டப்பட்டுள்ள குறியீடுகளாலும் நன்குணரலாம். அவர்கள், மட்பாண்டங்கள் மீது எழுத ஒருவகை நாணற் பேனாவைப் பயன்படுத்தினர். அத்தகைய பேனாக்களைக் கிரீட் தீவினர் பயன்படுத்தினர். அவை நாகரிகம் மிகுந்த எகிப்திலும் உரோமர்கள் காலத்துக்கு முன்