பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

மொஹெஞ்சொ - தரோ


இருந்ததில்லை. எழுதப் பயன்பட்ட சிவந்த களிமண் பலகைகள் சில கிடைத்தன. அவற்றின் நீளம் 10 செ.மீ. அகலம் 8 செ.மீ, கனம் 180 செ. மீ. அவற்றின் மீது ஒருவகைப் பொருள் தடவப்பட்டு, அப்பொருள்மீது எழுதப்பட்டிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து.[1] கணக்கற்ற முத்திரைகளிற் காணப்படும் சித்திர எழுத்துகளைக் கானின், சிந்து வெளி மக்களது எழுத்து முறையை நன்கு அறியலாம். அவ்வெழுத்துகள் இன்று வசிக்கப்படவில்லை. ஆயினும், ‘அவையே இந்திய முதல் எழுத்துக்கள் என்று இதுகாறுங் கருதப்பட்ட பிராமி எழுத்துகட்கே பிறப்பிடமாகும்’ என்று லாங்டன் (Langdon) ஹன்ட்டர் போன்ற மொழில்லுநர் அறைந்துள்ளனர். அவ்வெழுத்துகளை ஆராய்ந்து பாகுபடுத்தி ஹன்ட்டர் என்பவர் ஏறக்குறைய 250 பக்கங்கள் கொண்ட பெருநூல்[2] ஒன்றை 1934 இல் வெளியிட்டுள்ளார். ஹீராஸ் என்னும் பாதிரியார் ஒருவரும் இத்தகைய ஆராய்ச்சிப் பணியில் இறங்கியுள்ளார்.அவரும் விரைவில் நூல் ஒன்றை வெளியிடுவார். இங்ஙனம் அறிஞர் பலர் கவனத்தையும் ஈர்த்துள்ள அற்புத எழுத்துக்களைப் பண்டைச் சிந்துப் பிரதேச மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

வாணிபத் தொழில்

சிந்து மக்கள் தொழில்களிற் சிறந்திருந்தவர் என்பதற்கு அவர்களது வாணிபமே சிறந்த சான்று பகரும், அவர்கள் ஏறக்குறைய 4800 கி.மீ. தொலைவில் நடு ஆசியாவிலிருந்து எகிப்து வரை வாணிபம் நடத்தி வந்தனர். இக்காலப் புகை வண்டியோ, வான ஊர்தியோ, நீராவிக் கப்பலோ, மோட்டார் லாரிகளோ இல்லாத 5000 ஆண்டுகட்கு முன் அவர்கள், தங்கள் பண்டப் பொதிகளை எருதுகள் மீது ஏற்றிக்கொண்டு சென்றும், கப்பல்கள்


  1. Mackay’s ‘Further Excavations at Mohenjo-Daro’ Vol. I. pp. 215, 430.
  2. Dr.G.R.Hunter’s ‘The ScriptofAarappaand Mohenjo-Daro'(1934)