பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

மொஹெஞ்சொ - தரோ


மக்களைப்பற்றிய சுவை பயக்கும் செய்திகளையும் அறியும் முயற்சியே. புதைபொருள் ஆராய்ச்சி எனப்படும். சுருங்கக் கூறின், பலபொருள்களைச் செய்து நாகரிகத்தைத் தோற்றுவித்த பழங்கால மக்களது வரலாற்றைக் கண்டறிவதே புதைபொருள் ஆராய்ச்சியாகும்.’[1] இவ்வாராய்ச்சிக்குப் பக்கபலமாகச் சிறப்புற்று இருப்பவை மண்டையோட்டைச் சோதிக்கும் கலை, விலங்குகளின் எலும்புகளைச் சோதிக்கும் கலை, ‘நிலநூல் அறிவு’ என்னும் மூன்றாகும்.

ஆராய்ச்சி அவா உண்டானதேன்?

மிக்க பழங்கால மக்கள் தங்கள் வரலாறுகளை எழுதி வைத்திராவிடினும், பல இடங்களில் காணப்படும் சமாதிகள் மீதும் கற்கம்பங்கள் மீதும் அப்பழங்கால மொழிகளில் பல செய்திகள் எழுதப்பட்டுள்ளன. அவர்களைப் பற்றிய சில குறிப்புகள் செவியாறாக வந்து உலகத்துப் பழைய நூல்கள் என்று கருதப்படும் பிற்காலத்துத் தோன்றிய பைபிள், ரிக்வேதம், புராணங்கள் முதலியவற்றில் எழுதப்பட்டுள்ளன. அப்பழங்கால மக்கள் நடத்திய போர்கள், கடல் கெர்ந்தளிப்பு, பல நகரங்கள் அழிந்த்மை போன்ற சில குறிப்புகள் பிற்கால மக்களின் கவனத்தை ஈர்த்தன். கடல் கொந்தளிப்பால் உண்டான தீமை பைபிளிலும் ரிக்வேதத்திலும் புராணங்களிலும் ஈழ நாட்டவர் பழைய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. பைபிள், ரிக்வேதம், புராணங்கள் முதலிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அழகிய நகரங்கள் பல இன்று காணப்படவில்லை. பல நகரங்கள் தெய்வங்களது சீற்றத்துக்குட்பட்டு எரிக்கப்பட்டும் கடலுள் ஆழ்த்தப்பட்டும் விட்டன என்னும் குறிப்புக்களைப் படிக்கும் அறிவுள்ள மனிதன், அவை இருந்தனவாகக் கூறப்படும் இடங்களைத் தேடிக் கண்டறிய அவாவுதல் இயல்டேயன்றோ? ‘ஹோமர்’


  1. Archaeology is the study of the human past, concerned principally with the activities of man as a maker of ‘things’ - Stanley Casson in his ‘Progress of Archaeology’.