பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

மொஹெஞ்சொ - தரோ


ஒவியக் கலையும் சிற்பக் கலையும் வரலாற்றுக் காலம்வரை தொடர்ந்தே வந்துள்ளன என்று அறிஞர் கருதுகின்றனர். இவற்றால், இந்தியச் சிற்பக் கலைக்கும் ஒவியக் கலைக்கும் சிந்து வெளியே தாயகமானது என்பது தெளிவாகும் அன்றோ?

இசையும் நடனமும்

களிமண்ணாற் செய்யப்பட்ட ஆண் உருவம் ஒன்றன் கழுத்தில் ‘தவுல்’ கட்டப்பட்டுள்ளது. வெண்கலத்தாற் செய்யப்பட்ட நடனமாதின் வடிவம் ஒன்று கிடைத்துள்ளது. சில கற்சிலைகள் நடனமுறையிற் காணப்படுகின்றன. இரண்டு முத்திரைகளில் ‘மிருதங்கம்’ போன்ற தோற் கருவிகள் பொறிக்கப் பட்டுள்ளன. இக்காலத்து ‘வீணை’ போல ஒவியம் ஒன்று தீட்டப் பட்டுள்ளது. இக்காலத்துப் பாகவதர்கள் கைகளில் வைத்துக் கொண்டு தாளமிடும் கருவிகள் போன்றவையும் கிடைத்துள்ளன. இவை அனைத்தையும் நோக்க, சிந்து வெளி மக்கள் இசைக் கலையிலும் நடனக் கலையிலும் ஓரளவு பயிற்சி உடையவர் என்பது நன்கு விளங்குகிறது.

கணிதப் புலமை

சிந்து வெளியிற் கிடைத்துள்ள நிறைக் கற்கள் மிகப்பல. அவை பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் பயன்பட்டன எனக் கூறலாம். நிறைக் கற்களைப் பற்றிய விளக்கம் சென்ற பகுதியிற் கூறப்பட்டமையின் ஈண்டு விரித்தல் வேண்டா. நிறையின் மிகச் சிறிய அளவு தசாம்ச பின்னத்திற் செல்கின்றது; பேரளவு 15 பவுண்ட் வரை செல்கின்றது எனின், அக்கால மக்களது கணிதப் புலமை தெற்றெனத் தெரிகிறதன்றோ? நிறைகள் 64 வரை இரட்டை எண்களாக இருக்கின்றன. பின்ன அளவைக் குறிக்கும் நிறைகள் ஒரு கிராமின் 0.8565 அளவு வரை போகின்றன எனின் அம்மக்களது. கணிதக் கலை வளர்ச்சியை என்னென்று கூறி வியப்பது. ‘இந்நிறைக் கற்கள் மெசொபொட்டேமியா போன்ற அக்கால நாகரிக நாடுகளில் இருந்த நிறைக் கற்களை விட