பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

மொஹெஞ்சொ - தரோ


அஃதாயின், சைவ சமயம் போலவே சமண சமயமும் மிகவும் பழைய சமயமாகலாம்” என்பர். வேறு சிலர், “யோகியின் உருவம் சிவனைக் குறிப்பது; எருது. நந்தியைக் குறிப்பது”, என்பர்.

நந்தி வழிபாடு

சிந்துவெளி விலங்கு வணக்கத்தில் முதலிடம் பெற்றது . எருதே ஆகும். யோகிக்கு முன் திமில் பருத்த எருது நிற்பது போலவும் படுத்திருப்பது போலவும் காணப்படுகிறது. ஒரு கோவிலுக்குள் உள்ள சிறு கோவில் முன் (மூலஸ்தானத்தின் முன்) நந்தி நிற்பது ஒரு முத்திரையிற் பொறிக்கப்பட்டுள்ளது. சிந்து வெளி மக்கள் வாணிபத்திற் பேருதவி புரிந்து வந்தது எருதே ஆகும். ஆதலின், நாளடைவில் அது வணக்கத்திற்கு உரிய விலங்காக மாறிவிட்டது என்று அறிஞர் அறைகின்றனர். நந்தி வணக்கம் முதலில் தனியே இருந்து, பின்னர்ச் சிவ வணக்கத்துடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து.

ஒற்றைக் கொம்பு எருது

எருதுகளில் இருவகையின முத்திரைகளிற் காணப்படு கின்றன. ஒருவகையின திமில் பருத்த எருதுகள், மற்றொரு வகையின திமிலின்றித் தலையில் ஒற்றைக் கொம்புடையன. இவற்றின் முன்னர்ப் பின்னிய கிளைகளுடன் கூடிய மரம் ஒன்று இருக்கிறது. ஒற்றைக் கொம்புடைய எருதுகள் வணக்கத்தின் பொருட்டுக் கற்பிக்கப்பட்டவை என்றும், அவற்றின் வரலாறு சிறப்புடையதாக இருக்கலாம் என்றும் அறிஞர் கருதுகின்றனர்.

ஆறு தலை விலங்கு; கதிரவக் கடவுள்

ஒரு முத்திரையில், ஒரே உடலில் ஆறு வெவ்வேறு விலங்குத் தலைகள் தோன்றி இருப்பது போன்ற உருவம் ஒன்று காணப்படுகிறது. இந்த ஆறு தலைகளுள் மூன்று எருதின்