பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சமய நிலை

199


இடையில் மலர்க்கொத்தும் இருக்கின்றன. இரண்டு உருவங்களின் கைகள் நிரம்ப வளையல்கள் காணப்படுகின்றன. இவ்வுருவங்கட்கு எதிரில் சிறிய குட்டைப் பாவாடைகள் கட்டிய பெண்ணுருவங்கள் ஏழு வரிசையாக நிற்கின்றன. மண்டியிட்டு வணங்கும் பெண்ணுருவிற்குப் பின்புறம் மனிதத்தலையுடன் அரையுருவம் ஆடாகவும் மறுபாதி எருதாகவும் உள்ள விலங்குருவம் ஒன்று காணப்படுகிறது. இது, மர தேவதையின் ஊர்தியாக இருக்கலாம்

ஒரு மரத்திற்கு முன்னர் எருதின் கொம்புகளையுடைய புலி ஒன்றை, வால் - எருதின் கால்கள் - எருதின் தலை - மனித உடல் இவை கொண்ட விநோத விலங்கொன்று எதிர்ப்பதாக உள்ள தோற்றம் ஒரு முத்திரையில் காணப்படுகிறது. வேறொரு முத்திரையில் இரண்டு மரங்கள் மீது இருவர் உட்கார்ந்திருப்பது போலக் காணப்படுகின்றனர். அவர்தம் தலைகளில் மர முடி காணப்படுகிறது. இங்ஙனம் குறிக்கப்படும் பலவகை உருவங்கள் மர தேவதைகள் என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். ‘மரங்களில் மனித ஆவிகள் தங்குதல் உண்டு’ என்னும் கொள்கை அக்காலமக்கட்கு உண்டு போலும்! மரதேவதைகளுடன் புலிகளே தொடர்பு படுத்தப்பட்டிருத்தலின், மர தேவதைகட்கும் புலிகட்கும் ஏதோ தொடர்பு இருத்தல் வேண்டும். இதனால், மர வணக்கம் அக்காலத்தில் சிறப்புடையதாக இருந்தது என்பது நன்கு வெளியாகின்றதன்றோ?

கொண்டர் இரவில் மரமசைக்க அஞ்சுவர்; மரதேவதைகள் மரங்களில் உறங்கும், இராக் காலத்தில் மரம் அசைத்தலோ பழங்களைப் பறித்தலோ அவற்றிற்கு ஆகாது என்பது அவர் கொள்கைமரத்தை வெட்டுபவர். முதலில்மரத்திற்குப் பூசை இட்ட பின்னரே வெட்டத் தொடங்குதல் இன்றளவும் உள்ள பழக்கமாகும்.சிலசெடிகட்கு மந்திரம் கூறிக் காப்புக்கட்டிய பின்னரே இலை


1. ‘காமதேனு’ பெண் தலையும் பசுவுடலும் கொண்டதாகப் புராணங்களில் கூறப்படுதலை இங்கு நினைவிற் கொள்க.