பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதைபொருள் ஆராய்ச்சி

7


கிடக்கும் இடங்களைத் தோண்டி மண் மூடுண்ட நாகரிகத்தை அறிய மனம் நாடுகின்றது: செயலாற்றிப் பல உண்மைகளைக் கண்டறிந்து தளர்ந்துள்ள வரலாற்றுச் சங்கிலியை முறுக்குடையதாக ஆக்குகின்றது.

ஆராய்ச்சிக்குரிய இடங்கள்

கற்கால மக்களும் செம்பு வெண்கல இரும்புக் கால மக்களும் குடியேறி வாழ்ந்த இடங்கள் எல்லாம் ஆராய்ச்சிக்கு உரியனவே ஆகும். அம்மக்கள் பெரும்பாலும் ஆற்றுப் பாய்ச்சல் உள்ள சமவெளிகளிற்றான் வாழ்ந்து வந்தார்கள். மலைப்பாங்கான இடங்களில் பெரிதும் கற்கால மனிதர் நாகரிகச் சின்னங்களே மிக்கிருக்கும். சமவெளிகளில் பிற்கால மக்கள் சின்னங்கள் காணப்படும். இக்குறிப்பைக் கொண்டும், நாம் மேற்கூறிய பைபிள் முதலிய பழைய நூல்களில் கூறப்பட்டுள்ள குறிப்புக்களைக் கொண்டும் ஆராய்ந்தால், ஒவ்வொரு கண்டத்திலும் ஆராய்ச்சிக்கு உரிய இடங்கள் இருத்தல் உண்மை. அவற்றை அறிஞர் கண்டறிந்து வருகின்றனர். ஈண்டு நாம் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உரியனவும் அதற்குச் சார்பானவையுமாக இருப்பவை மத்தியதரைக் கடலிலிருந்து இந்தியா அடங்க உள்ள இடங்கள் ஆகும். அவை மால்ட்டா, எகிப்து, பாலஸ்தீனம், அசிரியா, பாபிலோனியா, ஏலம், பாரசீகம், சிந்துப் பிரதேசம், கங்கைச் சமவெளி, டெக்கான், தென் இந்தியா என்பன ஆகும். இவை பற்றிய இன்றியமையாத குறிப்புக்களை மட்டும் ஈண்டுக் காண்போம்.

தடித்த எழுத்துக்கள்

மால்ட்டா என்பது மத்திய தரைக் கடலில் இட்டாலிக்கும் வட ஆப்ரிக்கக் கரைக்கும் இடையில் உள்ள பழந்தீவு. இதன் தலைநகரம் ‘லாவெட்டா’ என்பது. இஃது, ‘அரண்மனைகளைக் கொண்டுள்ள நகரம்’ எனப்படும். இதில் உள்ள பல மாட மாளிகைகள் ஜெருஸ்லேத்தின் மகானான ஜான் என்பாருடைய வீரர்களால் கட்டப்பட்டவை. இது