பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

மொஹெஞ்சொ - தரோ


இருந்து வருகின்றது கவனிக்கத்தக்கது. பேராள்,[1] எண்ணாள்,[2] முக்கண்,[3] என்பன சிவனைக் குறிப்பன.

“இதுகாறும் கூறியவற்றால், ‘சிந்து வெளி மக்கள்’ லிபியாவிலிருந்து வந்தவர்கள், அவர்கள் நெடுங்காலத்திற்கு முன்பே இந்தியாவை அடைந்து, ஆஸ்ட்ரேலிய மக்களுடன் கலப்புண்டனர்; நம் வெண்மை நிறத்தையும் உருவ அமைப்பையும் இழந்தனர்; ஆஸ்ட்ரேலிய மொழியில் ஓரளவு கொண்டனர்; தங்கள் சித்திர எழுத்துகளை மேன்மையுற வளர்த்து வந்தனர். அவர்களே பிற்காலத்தவரால் ‘திராவிடர்’ எனப் பட்டனர். அவர்தம் எழுத்துகள் உலகப் புகழ்பெற்ற பல எழுத்துகள் பிறப்பதற்கு மூலமாயின. அந்த எழுத்துக் குறிகளைக் கொண்டே வடபிராமி வளர்ந்தது” என்பனவும் பிறவும் நன்கறியலாம்.[4]

சிந்துவெளியிற் காணப்பெற்ற எழுத்துக் குறி ஒவ்வொன்றும் ஒரு பொருளைக் குறிப்பதாகும். அது நாளடைவில் அந்தப் பொருளின் பெயரையே குறிக்க மாறி இருத்தல் வேண்டும். அதுவே ஒலி எழுத்தாகும்... எழுத்துகள் தோன்றும் விந்தையை ஒரளவு அறிதல் இங்கு அவசியமாகும்:” மனிதன் பேசமுடியாத நிலையில் இருந்த காலம் ஒன்றுண்டு. அவன் பிறகு (1) தான் விரும்பிய பொருளின் உருவத்தைச் சித்திரித்துக் காட்டினான்: (2) பின்னர் அதன் குண விசேடத்தைத் தன் செய்கையால் உணர்த்திப் பெற்று வந்தான்; (3) பிறகு அப்பொருளை உணர்த்த ஒர் எழுத்தைப் பயன்படுத்தினான், (4) இறுதியில் பேச்சு வகையால் சொற்றொடர்களைக் குறிக்க அடையாளக் குறிகளை இட்டுவந்தான். மனிதனது


  1. பேராள், பேரான்- ‘பேரானை பெரும்பற்றப் புலியூரானை’ தேவாரம்.
  2. ‘எண்குணத்தான் தாளை வணங்காத் தலை’ - திருக்குறள்
  3. முக்கண், முக்கண்ணன்- சிவவெருமானைக் குறிப்பன.
  4. Father, Herass Article on ‘Light on the Mohenjo-Daro Riddle’, in the ‘New Review’ (July, 1936).